பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

ஈ அதனைப் ‘பூந்தோட்டத்துக்குப் போ’ என்றால் அதற்கு “ஆவல் தனக்கு இல்லை” என்று குப்பைக் கூளம் தேடித் தான் செல்லும்; அது அதன் வாழ்வு முறை. அறிவு தரும் நூல் நிலையம் சென்று ஏடுகளைப் புரட்டிப் பார்க்க விரும்பாதவர் பகல் காட்சிக்கு வெய்யிலில் கியூ வரிசையில் நிற்பர். மட்டமான படங்களைப் பார்க்கச் செல்வரே அன்றித் திட்டமிட்ட கல்வியை நாடமாட்டார்கள் சிலர்.

கற்றவர் கூறும் கசடு அற்ற ஞானம் அஃது அவனைக் கவரவில்லை, ஈர்க்கவில்லை; ‘அறுவை’ என்று சொல்லி விட்டுக் கேளிக்கை விரும்பும் வேடிக்கை மனிதரோடு உல்லாசப் பேச்சுப் பேச அவர்கள் சகவாசத்தை நாடிச் செல்வர். கல்விமேல் நாட்டம் செலுத்த மாட்டார்கள்.

27. பணம் படைத்தும் என்ன பயன்?

(நன்றியில் செல்வம்)

விளாமரம் பக்கத்திலேயே காய்க்கிறது. அதன் மணம் மூக்கையும் துளைக்கிறது. வவ்வால் அருகிருந்தும் அதைத் தின்னச் செல்வது இல்லை. அது அதற்குப் பயன்படாது.

செல்வர்கள் மிக அருகில்தான் இருப்பார்கள் என்றாலும் மானம்மிக்க நல்லோர் அவரிடம் சென்று உதவிக்குக் கேட்க மாட்டார்கள். அச்செல்வம் பயன்படாத ஒன்று; யாருக்கும் பயன்படாது. அவர்களே வைத்துப் பூஜிக்கிறார்கள். என் செய்வது?

அள்ளிக்கொள்ளத் தக்கவகையில் கள்னிப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. அவற்றை யாரும் தலையில் சூடிக்