பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

கொள்வது இல்லை; சென்று பறிப்பதும் இல்லை. கீழ்மக்கள் செல்வம்மிக்கு வைத்திருந்தாலும் அறிவுடையவர் அவர்களைத் தேடிச் செல்லார்.

அடுத்த வீட்டு ஆசாமி, கொடுத்துப் பழக்கமில்லாத கருமி; அவனிடம் அவசரத்துக்கு என்று கேட்டால் சராசரி மனிதனாகக்கொடுப்பது இல்லை’ என்று கைவிரிப்பான். அவன் “கடல் நீர்.” உவர்க்கும்; யார்க்கும் குடிக்கப் பயன்படாது. கிணறு சிறிதுதான்; அதன் தண்ணிர் பருகப் பயன்படும். செல்வம் படைத்தவர்கள் நல்ல உள்ளம் படைத்தவராக இருப்பது இல்லை. ஏழைகளே ஒரளவு அவசரத்துக்கு ஆறுதல் காட்டுவர் என்று கருதப்படுகிறது. இதில் ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லை. கஞ்சத் தனம் இரு சாராரிடமும் உள்ளது. நல்லவர்கள் எங்கோ ஒரு சிலர் நன்மை செய்து கொண்டு இருப்பார்கள். அவர்களைத்தான் வறியவர் நாடுவர்; தேவைப்பட்டவர் தேடிச் செல்வர்; நாடிய பொருள் அங்குக் கைக் கூடும்.

கரிமுள்ளிச் செடியும், கண்டங்கத்திரியும் யாருக்குமே பயன்படுவது இல்லை. இவற்றைப்போல ஒரு சிலர் செல்வம் பிறர்க்குப் பயன்படாமல் சீரழிகிறது. என் செய்வது; தேவை உடையவரைச் செல்வம் நாடுவது இல்லை. தேவை அற்றவரிடம் அது சேர்ந்து பதுங்கிக் கொள்கிறது.

நல்லவர்கள் செல்வம் பயன்படுபவை; பலர் இருக்கிறார்கள் கஞ்சத்தனம் உடைய கீழ்மக்கள்; அவர்களிடம் செல்வம் தஞ்சம் புதுந்து கொண்டு வெளிவர மறுக்கிறது. என் செய்வது ?

நற்குணம் மிக்க பொற்புடையாரிடத்து வறுமை அடைக்கலம் புகுகிறது; பலாப்பிசின் போல ஈயாத