பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

அதுபோல பேதையரிடத்துப்படும் செல்வம் மேதகு செயல்களுக்குப் பயன்படுவது இல்லை. செல்வம் இருந்தும் செல்வம் ஒழுங்கு படுத்தப்படுவதில்லை; சிந்தித்துப் பார்க்க வேண்டிய செய்தி இதுவாகும்.

28. ஈயாத உலோமிகள்

(ஈயாமை)

நண்பனோ அந்நியனோ பசி அனைவருக்கும் உடைமை; அங்கே நட்பு பகை என்று பார்க்காதே; பசித்தவன் அவன் பசியைப் போக்குவற்குப் பின் வாங்காதே; அவன் வாழ்த்தட்டும்: வையட்டும்; அஃது அவன் போக்கு. கதவு திறப்பது காற்று வருவதற்கு பசித்தவர் தடையின்றி நுழைவதற்கு; ஒருசிலர் கதவு அடைத்துக்கொண்டு தாம் மட்டும் உண்டு மகிழ்வர்; அவர்கள் உள்ளம் மிகவும் குறுகியது. சுவர்க்கக்கதவுகள் அவர்களுக்குத் திறக்காது;ஒளி அவர்கள் வாழ்வில் காண மாட்டார்கள். அந்த வீடு இருண்ட வீடு என்றுதான் கூற முடியும்.

உதவுதல் என்பது உபரிப் பணம் உடையவரால்தான் முடியும் என்று கூறுதல் பொருந்தாது; கூலிக்கு வேலை செய்பவர் கூட ‘டீ’ க்கடைக்குச் செல்கிறான்; அவன் தோழன் அவனோடு செல்லும்போது, “நீ நில்; நான் ‘டீ’ குடித்துவிட்டு வருகிறேன்” என்று நிறுத்தி வைக்கமாட்டான். உடன் அழைத்துச் செல்வான்; இதுதான் பண்பாடு, பெரிய வீடு; கூர்க்கா, காவல் மேல்நாட்டு நாய், மனிதர்களுள் சாதி ஒழிந்தாலும் நாயினத்தில் ஒழியவில்லை. இவ்வளவும் மீறி உள்ளே செல்ல முடியுமா ? சென்றால்8