பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

கிறார்களா! பூர்வீக சொத்து என்று தார்மீகம் பேசுகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் பேரன் கொள்ளுப்பேரன் இப்படிப் பேர் கொண்டவர்களுக்கே உரிமை சேர்கிறது. அவனாவது துணிந்து எடுத்துத் தருகிறானா? பணிந்து பேசுகிறான்; “முன்னோர் பொருள் அதைப் போற்றிக் காப்பது தன் சீரிய கடமை” என்கிறான். சென்றவர்கள் வந்து தட்டிக் கேட்கப் போவது இல்லை. இவன் யாருக்கு அஞ்சுகிறான்? கஞ்சப் பயல்!

கன்றுக்குப் பசி என்றால் தாய்ப்பசு அதனை அனைத்துக் கொள்கிறது; மடி சுரக்கிறது; பால் அது குடிக்கிறது; கன்று சென்று அதனிடம் முறையிடுவது இல்லை, குறையுற்றுக் கெஞ்சுவது இல்லை. தாயே விரும்பிப் பால் தருகிறது. கன்று முந்துகிறதா, பசு முந்துகிறதா எது எப்படி என்று கூற முடியாது இதுதான் ஈவேர்க்கும் இரப்போர்க்கும் உள்ள உறவு முறை. இரப்போர் தாழ்வு மனம் கொள்ளக் கூடாது. அது அவர்களுக்கு அமைந்த உரிமை; ஈவோர் தருவது அவர்களுக்குப் பெருமை; வற்புறுத்தி வாங்குவதும் அதற்கு அஞ்சி ஈவதும் அற்பர்கள் செயலாகும்.

மாடு மேய்த்துவிட்டுக் கோலைத் தூக்கிப் போட்டு விட்டுக் கால்மேல் கால்வைத்துக் காட்டு வழியும் மேட்டு வழியும் திரிகிறானே கண்ணனின் கதைக்கு வாரிசு கொண்டாடும் யாதவ குலத்தினன்; மாடு மேய்க்கும் கோன். அவனுக்கு எந்தக் கவலையும் இல்லை. இப்படிப் பலர் செய் தொழில் செய்துவிட்டு எய்தும் பொருளைக் கொண்டு கூட்டல் கழித்தல் சரி செய்து கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். துண்டு விழும் பேரம் அவர்களிடம் இருப்பது