பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122


குறுக்கு வழியிற் சென்று செருக்கோடு வாழத் தருக்கு உடையவர் நினைக்க மாட்டார்கள். பாவமும் பழியும் தரும் என்றால் அந்த வழி நோக்கிச் செல்லார். அதைவிட ஒரு முழங் கயிறு; மூட்டைப் பூச்சி கொல்லி; இன்னும் இத்தகைய வகையறாக்கள் அவற்றைத் துணை தேடுவர். சாவு ஒரு நாள் நிகழ்ச்சி. அதற்குப் பிறகு நிலையான புகழ்ச்சி; மானத்தோடு வாழ்ந்தான் என்று எங்கும் தொடர்ந்த பேச்சு. பழி அது என்றும் நிற்கும். நினைத்து நினைத்து மனம் அழிய வேண்டியதுதான்; இன்பம் என்று மகிழ்ந்து நல்கிய பிறர்க்கு இடையூறு செய்து வாழ்கின்ற மடையர்கள் என்றும் கடையரே.

வளம் மிக்க இந்நில உலகில் கோடிக் கணக்கில் குவித்து வைத்து அதனால் அவன் ஈசுவரன் என்று பாராட்டப்படுகிறான். நாடி வரும் ஏழையரைக் கண்டால் அவன் கை முடங்குகிறது; குறைகிறது, அழுங்குகிறது. அவன் ஒரு நோயாளி ஆகிறான். இவனா செல்வன்! தரித்திரம் படைத்தவன்; நித்திய தரித்திரன்; பணம் படைத்த பரம ஏழை; இவன் கோடியில் ஒதுங்கிக் கிடக்க வேண்டியது தான். அதே நாலுமுழம் வேட்டி; உண்பது நாழி, அவன் ஏழைதான். இல்லாதவன்தான். அவனிடம் குறை கூறினால் அவன் நிறைசெய்கிறான். பிறர் துயர் களைகிறான்; இவன்தான் செல்வன்; இந்த நந்நிலம் இவனைப் பெற்ற தால் பெருமை பெறுகிறது. நிலம் அந் நல்லாள் மகிழ்கிறாள். இவர்கள் தரித்திரர்தாம், எனினும் நற் சரித்திரம் படைக்கின்றனர் .

இல்லாத கொடுமை, அதனால் இந்தச் செல்வனிடம் வந்து நின்று தாம் நிலையில் தாழ்ந்து விட்டதை எடுத்துக் கூறுகிறான்; செல்வன் அவனிடம் பரிவு காட்டுவதுபோல்