பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124


மதம் மிக்க யானை அதனைக் காட்டுவேங்கைப் புலி அடித்து வீழ்த்துகிறது; அஃது இடப்பக்கம் விழுந்தால் வேங்கை தன் வலிமைக்கு இழுக்கு என்று அதன் இறைச்சியைத் தொடாது; பசி எடுத்தாலும் அதனைச் சுவைக்காது; செத்து மடியுமேயன்றிச் சத்து அற்ற அந்தச் செத்தையக் கருதாது. சுவை குன்றிய உணவாக அது மதிக்கப்படும். "வீரம் குறைந்தது தோல்விக்குத் துவண்டது" என்று அந்த யானை கருதப்படும்.

யானை மிகப் பருத்த ஒன்றுதான்; அதை மிச்சம் வைத்து உண்டாலும் நாலு வாரம் தின்னலாம்; எனினும் அதைத் துச்சமாக மதிக்கிறது வேகம் உடைய வேங்கை அதே போல மானம் உடையவர் விமானம் மீது ஏறி இந்த உலகத்தையே வளைப்பதாயினும் தம் நிலையில் தாழ்ந்து அதனைப் பெறார். வானமே தம் காலில் வந்து விழுந்தாலும் அதனைத் தானமாகப் பெறார்; ஞானவான்களாக வாழ்வர்; நிதானம் தவறமாட்டார்கள்.

31. இரவலரின் அவலம்

(இரவச்சம்)

இரத்தல் இழிவுதான்; என்றாலும் அதுவும் தேவையாகிறது. ஆனால் அவர்கள் படும் இன்னல் மனஉளைச்சல் அதற்கு இல்லை குறைச்சல்.

ஆணவம் பிடித்தவர்கள் பணத்தை ஆளுபவர்கள்; "இந்தப் பிச்சைக்காரர்கள் நம்மால்தான் பிழைக்கிறார்கள். துப்புக் கெட்டவர்கள்; அதனால் இவர்கள் துயரத்துக்கு ஆளாகின்றனர். உள்ளவர் கை மடங்கினால் இல்லை என்பார்க்கு இல்லை வாழ்நிலை" என்று ஆண