பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125


வத்தோடு அறை கூவல் விடுபவர் உளர். செல்வத்திமிர்; அதனால் அவர்கள் இப்படிக் செருக்கோடு பேசுகிறார்கள். மருண்ட மனம் உடையவர்கள்; இவர்களிடம் தெருண்ட மனம் உடையவர் செல்லுதலைத் தவிர்ப்பர். உலகம் பரந்தது; உள்ளவருள் உயர்ந்தவரும் இருப்பர்; அவர்கள் உதவாமல் இரார்.

இரப்பதற்கு அஞ்சி இழிவான செயல்களில் இறங்குவர்; பழிதரும் பாவங்களையும் துணிவர்; உயிர் வாழ்க்கை உயர்ந்ததுதான்; தவிர்க்க இயலாததுதான்! அதற்காக மனிதன் தாழ்ந்தாபோக வேண்டும் சாவு என்ன கசக்கும் எட்டிக்காயா? "உறங்குவது போன்றது இறப்பு உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு" என்பது வள்ளுவன் வாக்கு; பிறப்பும் இறப்பும் அதிசய விளைவுகள் அல்ல; அவை மனிதனுக்கு ஏற்படுகின்ற சிறு விபத்துக்கள்; அவற்றைத் தாங்கி எறியத் துணிவு இருந்தால் இரந்தும் உயிர் வாழத் தேவை இல்லை; மறந்தும் அவர் இழிதொல்களை ஏற்கத் தேவை இல்லை. மானம் பெரிது; உழைத்து வாழ முடியும்; நம்பிக்கை தேவை. உள்ளம் உறுதியாக இருந்தால் தலை நிமிர்ந்து வாழ முடியும்" பிச்சை எடுக்கத் தேவை இல்லை.

இரக்கின்ற இழிவோடு அரிக்கின்ற வறுமையால், "அன்பு சுரக்கின்ற இல்லம்" என நினைத்து அவன் அடி எடுத்து வைக்கிறான். "ஏன்'டா, தடிகடா மாதிரி இருக்கிறாய்! எங்காவது வேலை செய்து பிழைக்கக் கூடாதா?" என்று எக்களிப்பால் கேட்கிறான். எழுபது லட்சத்துக்கு முதலாளி வேலை கிடைத்தால் அவன் ஏன் உன் வீடு தேடி வருகிறான். அவன் வந்தது அறிவுரை கேட்க அன்று பரிவுரை பங்கீடு பெற அன்று, 'பண உதவி' அதுதான் எதிர்