பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126


பார்க்கின்றான். கடிந்து பேசுவது மடத்தனம்; படிந்து பரிவு காட்டுதல் பெருந்தனம்; மதியாதார் வாசல் மிதிப்பது மிகவும் வேதனைக்குரிய செயல் ஆகும். இடன் அறிந்து கேட்க வேண்டும். வந்த பிறகு கடன் அறிந்து உதவ வேண்டும். இதுவே மனித இயல்; பண்பாடு; உடன்பாடு; அதற்கப்புறம் அவர்கள் பாடு.

திருமகள் செல்வச் செருக்கு உடையவள், அவள் எந்த இடத்திலும் நிலைத்து இருக்க மாட்டாள்; அறிவாளி; உழைப்பாளி; சேர்ப்பாளி இவர்களிடம்தான் தங்கிக் கல கலப்பாள்; சோர்வு இருந்தால், சோம்பல் காட்டினால் அவள் சொகுசாக அவனை விட்டு நீங்கி விடுவாள். பணத்தை வைத்துக் காப்பாற்ற முயலவேண்டும். பொருள் கைவிட்டுச் சென்றபின் கையறவு பாடினால் பயன் இல்லை, அவன் என்னவோ திட்டமிட்டே செலவு செய்தான், கஷ்டப்பட்டே வாழ்க்கை நடத்தினான். தெய்வம் கை கொடுக்கவில்லை. அது இவனைக் கைவிட்டு விட்டது இந்த இரண்டு காரணங்களால்தான் வறுமை வரவேற்புச் செய்கிறது. விரும்பியா ஒருவன் இரக்க வருகிறான். இரக்கமற்றவர் அதனை எண்ணிப்பாரார், எந்த நிலையிலும் பிறர் கையேந்தி வாழாமையே மேன்மைக்கு வழியாகும், ஊக்கம் அதனைக் கைவிடக் கூடாது; வறுமைக்குத் தாக்குப் பிடிப்பது வளர்ச்சியைத் தரும்.

கேட்டால் மறுக்க மாட்டார்கள்; கேட்டு இல்லை என்று சொன்னது இல்லை. திண்ணிய அன்பினர்; கண்ணியம் மிக்கவர் என்றாலும் பூவைக் கசக்கி முகர்ந்தால் பூவும் தன் மணம் கெடும். அதனை விலகி இருந்தே ரசிக்க வேண்டும். வேறு வழி இல்லை; அவர்களை அணுகித்தான் அவசியத்தை ஈடு செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் உள்ளம் வேதனை அடையாமல் இருப்