பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127

பது இல்லை. மனம் உருகுகிறது; வேகிறது; வேதனைப்படுகிறது. முன்பின் பழகாத ஒருவனிடம் சென்று துணிந்து கேட்டுப் பெறுவார் நிலை எண்ணிப்பார்க்கவே அச்சமாகிறது. அந்த அப்பாவிகள் எவ்வளவு துன்பப்படுவார்கள்; எண்ணிப்பார்க்க வேண்டியது. இரத்தல் அச்சம் தருவது; இது கொடியது. வாட்டம் தருவது,

அவசரப்பட்டுப் பிறர் கையேந்தும் நிலைக்குச் சிலர் சென்று விடுகின்றனர். கடன் கேட்கத் துணிகின்றனர். நன் கொடை என்று நவில்கின்றனர். பிறரிடம் கைநீட்டிப் பெற்று அப்படி என்ன உனக்கு ஆடம்பரவாழ்க்கை கேட்கிறது? கேட்டால் என்ன சொல்கிறான். "காருக்கு பெட்ரோல் தேவை; டி.வி. இல்லாமல் பொழுதுபோகாது, பட்டுப்புடவை இல்லை என்றால் பத்துக் கலியாணத்துக்குப் போக முடியாது. நகை இல்லை என்றால் புன்னகை எதிர் ஒலிக்காது" என்று பேசுகிறார்கள். சிக்கனமாக வாழ்க, சீராக வாழ்க, இந்த இன்பத்துணைகள் இல்லாமல் வாழ முடியும். இன்பம் சுமையாகக் கூடாது. சில சமயம் துன்பங்கள் சுகத்தைத் தரும். சில தேவைகளை மறுத்து வாழ்ந்தால் மகானுபவனாக வாழ முடியும். கவலை நீங்கும். பற்றுகளே பற்றாக் குறைக்குக் காரணம் ஆகின்றன

மானிடர் புதிதாகப் பிறந்து கொண்டே இருக்கின்றனர். பிறப்பில் புதுமை இருக்கிறது. பழையன மறைகின்றன. புதியன தோன்றுகின்றன. மனிதன் புதியவன்; ஆனால் அவன் பண்பில் செயலில் எந்த வகையிலும் மாறாமல் இருக்கிறான். கஞ்சத்தனம் என்பது அவனோடு தோன்றுகிறது; மனித நேயம் அதனை அவன் மறந்துவிடுகிறான்; பிறர் துன்பம் கண்டு துடிக்கும்.