பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130


வாங்குவது எவ்வளவு தீது" என்ற பாடத்தைக் கற்றுக் கொண்டாள். பக்கத்து வீட்டுக்காரி அந்த வைர அட்டிகையைத் திருப்பித் தந்தாள், அஃது அவளுக்கு அழகு சேர்க்கவே இல்லை. ஒரு சிலர் கொடுத்தும் கெடுத்து விடுகின்றனர். இயன்றவரை பிறரைக் கேட்காமல் இருப்பது நல்லது. உறவுகள் நீடிக்கும். இல்லை என்று மறுத்தாலும் அவர்கள் வேதனைப்படுவர். என் செய்வது?

32. அவை அறிந்து பேசுக

(அவை யறிதல்)

அறிவு மிக்கவர் அங்கு ஆய்வு நடத்துகின்றனர். கூட்டம் அது என்று நாட்டம் கொண்டு கண்டவர் நுழைகின்றனர். நுணுக்கமான செய்திகளை அவர்கள் கூரிய அறிவு கொண்டு அலசி விவாதிக்கின்றனர்." முட்டை முதலா? கோழி முதலா?" என்று தேவையற்ற கேள்வியைக் கேட்டு அதற்கு ஒரு பக்கம் நின்று வாதாடுகிறான். இதைப்பற்றி யாருமே முடிவு கண்டதில்லை. வீண் தருக்கம் அடுத்த கேள்வி "பெண் தொடக்கமா ஆண் ஆரம்பமா ?" இவை நம் அறிவுக்கு அப்பாற்பட்டவை: "கடவுள் எப்பொழுது தோன்றினார் ?" இது குறுக்குக் கேள்வி. அவையிற் கூடிய புலவர்கள் நவையற்ற செய்திகளைப் பேசுகிறார்கள். இவர்கள் கவைக்கு உதவாதவற்றைப் பேசி அவலத்தை உண்டாக்குகிறார்கள். கூட்டம் கலவரத்தில் முடிகிறது. அவைக்கண் கற்றோர் தேவையற்றவரை அனுமதிப்பது அமைதியைக் கெடுக்கும். அசதியை உண்டாக்கும். பெரிய விஷயங்களைச் சிறியவர் முன் பேசுதல் கூடாது.