பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131


கூட்டம் இருவகைப்படும். ஒன்று சிறப்புக் கூட்டம்; மற்றொன்று பொதுக்கூட்டம். எதிலும் சில வரை முறைகள் உண்டு; தலைவர், பேச்சாளர் என்ற பாகுபாடு உண்டு. நன்றி நவில நல்லவர் ஒருவர் நாலு வார்த்தை பேசி முடிப்பர். தலைவர் முன்னுரை பேசி முடிவுரை தருவர். பேச்சாளர் அவர்தான் தலைப்பை ஒட்டித் தலையைச் சுற்ற வைப்பார்; அவையில் அமர்வோர் அடக்கமாக அமர்ந்து சொல்வன கேட்டு அறிய முற்பட வேண்டும். புரியாமல் இருந்தால் வெளியே செல்வது கண்ணியம்; அயராது அசையாது அமர்வது நாகரிகம்; வாயைத் திறக்காமல் இருப்பது அவை அறிந்து செயல்படுவது ஆகும்.

பள்ளியிலேயும் பட்டி மண்டபங்களிலேயும் சிலர் செய்யுட்களை மனப்பாடம் செய்து கடல் மடை திறந்தது போலக் கனத்த சொற்களில் அடித்துப் பேசுவர். கம்பனைக் கரைத்துக் குடித்துவிட்டவர் போல் இரைத்துப் பேசுவர். இவர்களைக் கல்விக் கடல் என மதித்துக் கரகோஷம் செய்து ஆரவாரித்துப் பாராட்டுவர்.

பட்டி மன்றத்துக்கு என்றே சில படைகள் திரண்டு எங்கும் 'வெட்டி’ப் பேச்சுப் பேசுவதையே புலமை என்று காட்டி வருகின்றனர். இவர்களில் பலர் பதிவுத் தட்டுகள். ஆழ்ந்த புலமை உடையவர் என்று கூறமுடியாது. ஆனால் சொல் விற்பன்னர்; சுகமாய்ப் பேசுவர். அதற்கு இப்பொழுது கூட்டம் மிகுதியாகக் கூடுகிறது. அறிவுக்கு விருந்தாகின்றது. வரவேற்கத்தக்க வளர்ச்சி என்றே கூறவேண்டும்.

கல்வி கற்றவர் ஆறி அடங்கி ஒரு சில சொற்களே பேசுவர்; ஓசை எழுப்பி மக்களை மகிழ்விக்கத் தெரியாதவர்கள் இவர்கள். இவர்களே சான்றோர் என மதிக்கப்