பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134


வது, பள்ளத்தில் கிடப்பவரைத் துள்ளி எழச் செய்வது. இந்த அடிப்படையில் இவர்கள் எழுத்து எழுச்சி அமைந்தால் பாராட்டப்படுவர். வெறும் சொல்லடுக்குகள் கவிதை ஆகாது; இவர்கள் அவை ஏறுவதால் அறிஞர்கள் அங்கு இடம் பெறுவது இல்லை. கற்றவர்கள், சிந்தனை மிக்கவர்கள்; கற்பனை உள்ளவர்; இவர்களே அவைஏறிக் கவிதை அரங்கேறத் தகுதி படைத்தவர் ஆவர்.

வெறும் சொல்லடுக்குகள் வேசியர்தம் புனைவு ஆகும். கற்ற அறிஞர் சொற்கள் கருத்து ஆழம் மிக்கவை. காசுக்கு என்று கவிதை பாடி ஓசைகளை எழுப்பித் தம்மைக் கவிஞர்கள் என்று பேட்டி அளித்துக் கொண்டு இருக்கின்றனர். இன்று ஒசைதான் கவிதை என்ற மோசமான நிலையை அடைந்துவிட்டது. விளக்கமாகக் கூறட்டுமா! திரைப் பாடல்கள் வெறும் இரைச்சல். கவர்ச்சிக் கன்னிகள் இவர்களை வைத்து ஆடவைத்து ஆபாசத்தை விற்பனை செய்கின்றனர். இப்படி எழுதுகிறது திரைப்பட விமர்சனங்கள் கவிதை ஒன்று இரண்டு சில கருத்துக் கொண்டவை. பல ஆட்டுக்கு ஏற்ற ஒசைத்தாளங்கள்; ஒரே கூளங்கள். இவை பாடல்கள்; மறுக்கவில்லை; கவிதைகள் ஆகா.

விளக்க உரை செய்தால் அதற்கு விருத்தி உரை என்று பெயர். தொல்காப்பியப் பாயிரத்துக்கு என்றே ஒரு விருத்தி உரை உள்ளது. இவ்வளவும் கூறவல்லவன் தமிழ்ப் புலவன். புலமை பெற்று உயர்பவனே அவை அறிந்து பேச வல்லவன் ஆகிறான்.

நூல்பல கற்றவராக இருக்கலாம், நுண்ணறிவு படைத்தவராக இருக்கலாம். அவர்கள் நிறைகுடமாக இருக்க வேண்டும். வாதங்கள், பிரதிவாதங்கள் அவை