பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135


யின்கண் நடைபெறலாம். அவற்றிற்கு அஞ்சாமல் தக்க விடை தரும் தகவு அமைய வேண்டும்.

ஆசிரியத் தொழில் செய்வோர் மாணவர் தரமறிந்து நிலை அறிந்து அவர்கள் வினா அறிந்து விடை தரல் வேண்டும். 'சுட்டுப் போட்டாலும் படிப்பு வராது. குட்டிச் சுவராகப்போ' என்று சாபம் கொடுப்பவர் ஆசிரியர் ஆகார்.

கல்வித் தகுதி மட்டும் போதாது; பண்பாடு கூட்டல் தேவை கல்வி மனப்பழக்கம்; பண்பாடு செயற்பழக்கம் அது சிலசமயம் 'குடிப்பழக்கத்தாலும் அமைவது. அதாவது பிறந்த குடியின் பின்னணி, சார்பு, வளர்ப்பு இவையும் கற்றவனை மதிக்கத்தக்கவனாக ஆக்குகிறது. எனவே கல்வியோடு பண்பும் கலந்தால் அவையின்கண் அவனை அவனைவரும் பாராட்டுவர். கல்வி கற்றவர் என்று கருதுவர்.

33. அறிவு குறைந்தவர் அவதி

(புல்லறிவாண்மை)

நூல்பல கற்கிறாய்; நுண்ணறிவு பெறுகிறாய் என்று கூறமுடியாது. நூல் ஒரு பாற்கடல்; அதனைக் கடைந்து எடுக்கும் அமுதம் அறிஞர்களின் அனுபவ மொழிகள். அருள் அறமும் மனித நேயமும், மாண்பும் உடையவர்கள் சிந்தித்துக் கூறும் சிந்தனைகள். அவர்கள் வாயில் வரும் சில சொற்கள் அவை திருக்குறள் போன்றவை. அரிய கருத்துகள்; இவற்றை நல்லறிவுடையவர் கேட்டு அறிந்து