பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136


பயன்படுவர். அறிவு குறைந்தவர் அவை செறிவு மிக்கன என்பதால் அவற்றை வாங்கும் ஆற்றல் அற்று அவை தமக்கு ஏலா என்று புறக்கணிப்பர். அமுத மொழிகளை அறிவதை விட்டுக் குமுத ஏடுகளைப் புரட்டிக் கொண்டு. "இப்படத்தில் எத்தனை சன்னல்கள் இருக்கின்றன?" என்ற கேள்விக்கு விடைகண்டு கொண்டு இருப்பர். இன்று வினா விடைகள் நடிகையின் நயனங்களைப் பற்றியும் நடிப்பு நளினங்களைப் பற்றியுமே அமைகின்றன. அறிவு குறைந்த சாமானியர்களைக் கவர அவர்கள் எடுத்தாளும் உத்திகள் இவை. இதில் பங்கு கொள்பவர் நிறை அறிவுடையவர் அல்லர்.

அறிவு குறைந்தவர்களுக்கு ஆழ்ந்த சிந்தனைகளில் பிடிப்பு ஏற்பட வாய்ப்புக் கிடையாது. அறிஞர்களிடம் பழகுவார்கள் ஆனால் அவ்வறிவில் நாட்டம் காட்டமாட்டார்கள். குழம்பைத் துழவும் அகப்பைக்கு "அதன் சுவை எப்படி ?" என்றால், "அஃது எத்தனை படி?'" என்றுதான் கேட்கும். நல்லது கேட்க நயம் அறியும் நுட்பம் தேவைப்படுகிறது.

அறிவு விவாதங்கள் தொலைக் காட்சியில் வைத்தால் உடனே அவற்றை மாற்றி வைத்து விட்டு அநாகரிக ஆட்டங்களை நாடுவர் பலர்; அவளை அவன் பிடிக்க எடுக்கும் ஒட்டம் அது ருசுவாகிறது. அறிவின் நாட்டம் அவனை இழுக்க மறுக்கிறது. எலும்புத் துண்டைக் கடித்து வாயைப் புண்ணாக்கிக் கொள்ளும் நாய்க்குப் பால் ஊற்றிய சோறு போட்டால் அதில் அக்கிரகாரவாசனை வீசுவதால் அகன்று போய் விடுகிறது. சாக்கடை மொழி பழகிய அதன் செவிகள் வேறுவிதமாகக் குரைக்கப் பழகியது இல்லை.