பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137


அறக்கருத்துகள் ஆயிரத்துக்கு மேல் அறிவித்தார் வள்ளுவர். அதற்கு மேலும் நூற்று முப்பது தேவைப்பட்டது. ஏன் இந்தக் கூட்டல்? ஆயிரம் அது அழகான எண்; திருக்குறள் எத்தனை என்று கேட்டால் யாருமே இன்று சரியாகச் சொல்ல முடிவது இல்லை. சிறிது அவர் குறைத்துக்கொண்டு இருக்கலாம் என்பார். ஏன் ஒரு குறளைக் கூடப் படிக்கத் திரு அருளாளர் வரமறுக்கிறார். குறள் வகுப்பு என்றால் ஒதுக்கிவிடுகிறான். நல்லது கேட்பது அதற்கு அவன் அஞ்சவில்லை. கேட்டுவிட்டு அதனால் அறம் வழுவாமல் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. குறளைப் படிக்கலாம்; உரை காணலாம். ஆனால் அதன்படி நடக்க இயலாது. அதனால் இஃது அவன் புறக் கணிப்புக்கு உள்ளாகிறது. அறத்தின் திசையையே பார்க்க மறுக்கும் மறக்குடி மாக்கள் இவர்கள். எக்கேடு கெட்டால் என்ன? வாழ்ந்தால் என்ன? செத்தால் என்ன? வாக்குரிமை பெற்றுவிட்டுச் சாவடிக்கு நடக்கத் தயங்கும் சோம்பேரிகள் இவர்களுக்குக் குடி உரிமை வழங்குவது தேவை இல்லை; அதற்கு அவர்கள் அருகதை அற்றவர்கள்.

தாடி வளர்த்துவிட்டான் கேட்டால்"'நாடி தளர்ந்து விட்டது" என்கிறான். வீட்டில் குழந்தைகள் சத்தம்போட்டால் இவன் கத்தி அடக்குகிறான். குப்பை கிழித்துப் போட்டால் சுத்தம் சோறும் போடும் என்கிறான். சிரித்துப் பேசினால் சீரழிந்து போவாய் என்கிறான். புகையிலை விரித்தால் போச்சு பெண் சிரித்தால் போச்சு என்று கட்டுப்படுத்துகிறான். விடுமுறை விட்டால் கூடப் பாடம் படி என்று பையனை வற்புறுத்துகிறான். சிரிக்கவே அந்த வீட்டில் இடம் இல்லை. முகத்தை மூஞ்செலியாக்கி வைத்துக் கொள்கிறான். கேட்டால்", வம்பு தும்புக்குப் போகமாட்டேன். நான் உண்டு என் வேலை உண்டு;