பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138


பெண்டு உண்டு; பிள்ளை உண்டு அவர்கள் எனக்குக் கற் கண்டு. வேறுஎதையும் நான் கண்டு கொள்வதில்லை" என்கிறான். ஒட்டைக் கார் அதை ஓராயிரம் முறை துடைத்துக் கொண்டு இருக்கிறான். நாலு சுவர் அதன் நடுவில் இவன் நாயகன். தனிமனிதன் சே! கொஞ்சம் சிரிக்க மாட்டான்; விடு அவனை, வேறு பேச்சைத் தொடு.

வாலிபமுறுக்கு; பணச் செறுக்கு; அதிகாரம் எல்லாம் இருக்கு; இப்பொழுதுதான் நீ நினைத்ததை முடிக்க முடியும். ஆனால் நினைப்பது யாது? செய்யத் தக்கது யாது? இன்று பொதுவாழ்வில் எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. ஆட்சியாளரை நம்பி அங்குமிங்கும் பொருள் திரட்டிச் சில நன்மைகள் கருதித் திரட்டிய நிதி, அஃது அதோகதி, பறிகொடுத்து விட்டான் நடுத்தெருவில் நின்று நலியும் இளைஞர்கள் செல்கதி இன்றித் தவிக்கின்றனர். படித்தவன் அதற்குப் பிறகு முடித்தபிறகு, "ஏன் படித்தாய் மகனே! இருந்த பணம் இருந்திருந்தால் விருந்துடன் நன்றாகச் சாப்பிட லாமே" என்று வருந்தும் இளைஞர் ஏராளம்; பெண்ணைப் பெற்று வளர்த்து அவளைக் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டதுபோல காசு குறைவாகக் கேட்டவனுக்குக் கட்டிக் கொடுத்துவிட்டு அவள் கட்டுக் கழுத்தியாக வீடுவந்து சேர்க்கிறாள். 'வாழா வெட்டி' என்று அவள் எட்டி உதைக்கப்படுகிறாள். அவள் வாழ்வு எட்டிக்காய் ஆகிறது. எவ்வளவோ அறங்கள் செய்யலாம். அதற்கு நீ சிந்தை செலுத்து; என்ன செய்வது? பொழுது கழியவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறாய் வேலையா இல்லை; வேண்டியது இருக்கிறது. விவரம் அறிந்து செய்து முடி; இந்த வயதில் நீ நல்லதை நாடா