பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139


விட்டால் முதுமையிலா நாடப் போகிறாய்? எட்டு அடி எடுத்து வைக்க நீ தட்டுத் தடுமாறும் காலம்; நீ கட்டியவளும் கருதாள்; ஒட்டி உறவாடிய சின்ன வீட்டாளும் சீண்டாள். யாருமே வேண்டார். இளமையில் கல்; வளமையில் அறத்தோடு வாழ்க! உயர்க.

பிடித்து வைத்த பிள்ளையார் என்று அசையாமல் எதற்கும் இசையாமல் இருக்கும் இந்தப் பிள்ளை யார்? கொட்டாப் புளிபோல இருக்கிறான். கொடுக்காப்புள்ளிக் காய் போல் கரிக்கிறான். எப்பொழுதாவது சிரிக்கிறானா என்றால் சிரிப்பது இல்லை. வசதி இருந்தும் வாழ மறுக் கிறான். அவனாக இன்பம் அடையமாட்டான். சரி இல் லாதவன் அவனுக்குக் கூழுக்கு உப்பு இல்லை என்கிறான்; மகளுக்கு மணம் முடிக்க அதுவே அன்றாடம் அவன் வீட்டுப்பட்டிமன்றப் பேச்சாக அமைகிறது. அவசரத்துக்கு ரூபாய் ஐந்து என்று கேட்டால் அதை எடுத்துவிட்டால் திருப்பிப்போடுவது எப்படி? அப்படியே போய்விடும் என்று அஞ்சுகிறான். காசு என்றால் வேசியர்கள் கெட்டார்கள் அலைகிறான்.

நல்ல வழிகளில் அவர்கள் நடத்தை இயங்காது. 'குட்டி' என்கிறான்; 'புட்டி' என்று தேடுகிறான். 'வட்டி' என்று அதில் வாழ்கிறான். கட்டி என்று பொன்னைத் திரட்டிவைக்கிறான். மொத்தத்தில் அவன் ஒரு மகாமட்டியாகச் செயல்படுகிறான். சும்மா இரு சொல்லற என்றால் 'அம்மா! அது தன்னால் இயலாது' என்கிறான். ஒயாப் பேச்சு; அவன் விடும் மூச்சு ஆசைத் தீயாக இருக்கிறது. வேலை இருக்காது; ஆனால் வீணாகத் திரிவான் பொய் சொல்வது அவனுக்குப் பொழுதுபோக்கு. கேட்டால் நான் கவிஞன் என்கிறான். 'கவிதைக்குப் பொய் அழகு,