பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140


என்று புதுக் கவிஞன் ஒருவன் பாடிவிட்டான், அதனை இவன் சான்றாகக் காட்டுகிறான் பொய் சொல்வதற்கு.

காசு மிகுந்து விட்டால் அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது. பேரன் பேர்த்தி எடுத்து விட்டான்; பேரமைச்சன் என்ற நிலையையும் எட்டிப் பிடித்தான் என்றாலும் அவன் அடங்கிக் கிடக்கவில்லை. பேரழகியைக் கைப்பிடித்தான். அஃது இந்த நாட்டுப் பெரியவர்கள் விவகாரம். அப்படி வாழ்ந்த முதியவன் ஒருவன் கன்னி ஒருத்தியை கைக்கு அடக்கமாக இருக்கட்டும் என்று கலியாணமும் செய்து கொண்டான்.

அவள் அதிர்ஷ்டக்காரி, மூப்பு வந்து அவனைக் கிடத்தி விடுகிறது. செல்வத்துக்கு எல்லாம் அவள்தான் வாரிசு; அதற்குத் தேவையில்லை யார் சிபாரிசும். வயித்தியன் சொல்லிவிட்டான். வேண்டியவர்களுக்குச் சொல்லி அனுப்புக என்று. அதற்குப் பொருள் தேவைப்பட்டவர்களை வரச் சொல்லி அனுப்பி வைத்தாள். காணார், கேளார், கால் முடப்பட்டோர் இந்த வரிசைக்காரர்கள் அந்த வீட்டை நோக்கி முற்றுகையிட்டனர். சேர்த்து வைத்த பொன்கட்டி அது வைத்திருந்த பெட்டி புதுசு விடம் தந்திருந்தான். அவன்பால் 'மவுசு' குறைந்தது; "தருமம் செய்தால்தான் அந்தப் புண்ணியம் கூட வரும்" என்று தம்பூராக்காரர்கள் தம்பட்டம் அடித்துப் பேசியதைக் கேட்டிருந்தான். அந்தப் புண்ணியத்தை ஈட்ட அவன் அந்தப் பொன்னைக் காட்ட அவள் அறிந்து கொண்டாள். "இந்தக் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டேன். இளமையை அவனுக்கு அடகு வைத்தேன்." என்று குமுறுகிறாள்.

அவன் படகு "திசை மாறுகிறது" என்பதை அறிகிறாள். அவன் பரிபாஷை அவளுக்கு மட்டும்தான் புரிந்