பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141


தது. மற்றவர்கள் அதை அறிய முடியாமல் ஆர்வம் காட்டுகின்றனர். "ஐயா விளாம் பழமா கேட்கின்றீர்; அஃது உடம்புக்கு ஆகாதே" என்று அன்புடையாளைப் போலப் பேசி அவன் பேச்சை மாற்றுகிறாள். அவர் மறுபடியும் கையை உருட்டுகிறார்; அவள் 'கடலை உருண்டையா? அஃது உடலுக்கு ஆகாதே’ என்கிறாள். அவர் "எள்ளுருண்டை" என்று எரிச்சலோடு சொல்லி வினவுகிறார். "இது நள்ளிரவு எங்கே போவது?" என்று மழுப்புகிறாள். இழுப்பு வருகிறது; திரை மூடப்படுகிறது. அவனால் நினைத்ததை முடிக்கவில்லை. வாலிப வயதில் வாயதா கேட்காமல் எந்த நல்ல காரியத்தையும் செய்து முடிப்பதுதான் அறிவு; அதுவே வாழ்க்கையின் விரிவு.

34. செம்மாக்கும் கீழ்’’

(பேதைமை)

கரை ஏறக் கருதாது கறைபடிந்த வாழ்வில் நிறைவு காண்கிறாய்; 'கதகதப்பும்' 'மிதமிதப்பும்' சூடு பிடிக்கின்றன. இன்ப வாழ்வில் நீந்தி விளையாடுகின்றாய் அலைகள் எழுச்சியும் வீழ்ச்சியும் தருகின்றன. இன்பம் ஒரு மயக்கம்; அவை நிலைக்கும் என்பது அறியாமை; ஆமையை வெந்நீரில் போடுகிறார்கள்; குளிப்பாட்ட அன்று; மகிழ்வூட்ட அன்று. அது செந்நீரில் வெந்து சாக. அந்த நீர் மிதமான சூட்டில் இதமான இன்பம் அனுபவிக்கிறது அந்த ஆமை; வெத வெதப்பு அதற்கு மிதமிதப்புத் தருகிறது. இன்பம் நிலைத்தது என்று இறும்பூது அடை கிறது. அய்யோ பாவம்; சூடு மிகுகிறது; துடிக்கிறது; உயிர் வெடிக்கிறது. தன்னை இழக்கிறது, அழிவு பெற்று விட்டது. இதுபோல உன்நிலைமை ஆகக் கூடாது. பத