பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

வீட்டில் மனைவி மக்களோடு போராட்டம். அவர்களை அடக்கி ஆள நினைத்தான். தன் போக்கின்படித்தான் அவர்கள் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். தொழில் துறையில் எல்லாம் தனக்குத்தான் தெரியும் மற்றவர்கள் கற்றுக் குட்டிகள் என்று கூறி அவர்களை அடக்கி வைக்கிறான். பிறர் உரிமைகளை மதிக்க மறுக்கி றான்; இவன் வாழ்வு தோல்வியுறுகிறது; மனம் உளைகிகிறான் களைப்புதான் ஏற்படுகிறது.

உலக நடை இது என்று அறிந்து செயல்படுபவர் அறிவு குறைந்தவராயினும் அவர் வெற்றி பெறுவார். அவரால் மற்றவர்களுக்கு இல்லை தொல்லை. விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் தான் எதையும் சாதிக்க முடியும். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதித்தால் அது சாதனை ஆகாது; மற்றவர்களுக்கு அது வேதனையாகும்.

“கல்லாதவரே மிகவும் நல்லவர், ஏன் எனில் அவர் கள் மிகையாகச் சொல்லாதவர்கள்” என்று கூறுவது வழக்கம். இவை எல்லாம் புகழ் மொழிகள் அல்ல; இகழ் மொழிகளே. அதே போல நாலடியார் நாலு வார்த்தை கள் பேசுகின்றன. கல்லாதவரை இவ்வாறு கூறி ஏசுகின்றன. கல் கல்லாதவரைவிட மேலானது. அது இருக்க, கிடக்க, நடக்க, வீடுகட்ட எல்லாவற்றிற்கும் உதவுகிறது. என்று கூறுகிறது. இதற்கு ‘மலைப்பிஞ்சு’ என்று அழகான சொல்லும் உள்ளது. கூட்டத்தைக் கலைக்க எதிரிகளைத் தாக்க இந்தப் பிஞ்சுகள் பயன்படுகின்றன. கல் சடப் பொருள், திடப்பொருள் என்றும் அறிவு ஜீவியாக இருக்க வேண்டிய மனிதன் கல்லாதவனாகக் கிடந்தால் அவனுக்கும் கல்லுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? அவன்