பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

மானிடனாகப்பிறந்தும் உயர்வு பெறத் தகுதியற்றவனாகி விடுகிறான். அறிவு அற்ற நிலையில் அவன் கல்லைவிடத் தாழ்ந்தவன் ஆகின்றான்.

நாவிற்கு நரம்பு இல்லை என்றால் அது ஒரு வரம்புக்கு உட்படாது. தம்மினும் எளியவர் தம்மிடம் வேலைக்கு அமர்ந்தால் ‘இடு எடு’ என்று கெடு பிடி காட்டுவது இன்று நடைமுறை. ஆகாத பெண்டாட்டி அவள் கால் பட்டால் குற்றம், கைப்பட்டால் குற்றம், என்பது பழமொழி. தாம் இட்ட பணிகளைச் சற்றுப்பிசகாகச் செய்து விட்டால் அவர்களை நோக்கிக் கெடு பிடி; திட்டு வசவு ‘நா காக்க’ என்று கூறியது இவர்களையும் நோக்கியே. பணி செய்பவர் அவர்கள் அடிமைகள் அல்லர்; மிடிமைக்காக அவர்கள் பணி செய்கின்றனர். ஆட்களைக் கனிவாக நடத்துவது கண்ணியம் ஆகும்; அது நன்மை தரும்.

சில முரடர்கள்; கல்லாத கசடர்கள்; அவர்கள் தீமை செய்தே பழகிவிட்டவர்கள் அவர்களைத் திருத்தலாம் என்று திருக்குறள் கொண்டு செல்கிறாய்; அதை நீ தான் படித்துக் கொண்டிருக்க முடியும். அவனுக்குப் பொருள் விளங்காது. தனி மனிதன் மட்டும் அன்று. இனித் திருக்குறளைப் படித்தால் பயன் இல்லை என்று சமூகம் பேசி வருகிறது. ஆட்சியில் உள்ளவர்கள் இன்று ஊழலில் உழல்கிறார்கள் என்று உலகம் பேசுகிறது. துணிந்து எதிர்க்க முடியுமா? நீ தோல்வி தான் காண்பாய். சில அநீதிகள் கால் ஊன்றிவிட அவற்றையே மூலதனமாக வைத்து இன்று நிறுவனங்கள் நடைபெறுகின்றன. எதையுமே மாற்ற முடியாது என்ற நிலைக்கு வந்து ஆகிவிட்டது. கல் பாறையை அகற்ற நீ கை கொடுத்தால் உன்