பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145


கைதான் நசுங்கும்; பாறை அசங்காது. அதை அகற்றக் கடப்பாறை தேவைப்படும். அதைவிட இயந்திரத் துாக்கி தேவைப்படும். ஒரு பிரளயம் வந்தால் தவிர இந்தக் குப்பைகளை ஒழிக்க முடியாது அதனைப் புரட்சி என்று பேசுகிறார்கள். அதிலும் இன்று நம்பிக்கை அற்று விட்டது. நக்சலைட்டுகள் பயங்கரவாதிகள் இவர்கள் உருவாகிவிட்டனர். இன்று இவர்கள் புதுப் பிரச்சனைகள் ஆகிவிட்டனர்.

அதோ அது யார் வீடு, 'அமைச்சர் இல்லம்' என்று அழகு தமிழில் அறிவிக்கின்றனர். அங்கே ஒரே கூட்டம் ஏன்? மனு நீதிச் சோழனிடம் சென்று நீதி கேட்க அன்று; அநீதியை விலைக்கு வாங்க; தவறான வழிகளில் சலுகைகளைப் பெற. நியாயத்துக்கே அங்கு விலை பேசப் படுகிறது. அது நிதித்தலம் என்று பேசிக் கொள்கிறார்கள். போன காரியம் வெற்றியா? இல்லை என்று வெறுங்கை காட்டுகிறார்கள். அங்கே நெருங்கிக் குழுமி இருந்தனர். நல்லதும் அங்கே நடைபெறுவதும் இல்லை. கெடுதலும் இல்லை; ஏன் அங்குச் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்? அதற்கு விடை நாலடியார் கூறுகிறது, நெய் இருக்கும் பாத்திரம் ; மூடி இறுகத்தான் உள்ளது; எதுவும் கிடைக்காது என்றாலும் அதைச் சுற்றி எறும்புகள் ஏறிக் கொண்டும் இறங்கிக் கொண்டும் இருக்கின்றன. இந்த எறும்புகள் நிலைதான் அதிகாரமும் பணமும் உடையவர்கள் இல்லமும் அதைச் சுற்றி வரும் கூட்டமும்.

எல்லாம் இருக்கிறது என்றாலும் எதுவும் இல்லாதவ னாக வாழ்கிறான். வசதிகள் எது இல்லை? இன்றைய மின் அணு இயந்திரங்கள் எல்லாம் நிறைந்து விட்டன. அரைக்க, வெளுக்க, துடைக்க, எடுக்க, பிடிக்க இவற்

10