பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146


றிற்கு எந்திரங்கள் அல்லது எடுபிடி ஆட்கள். அவர் மனைவி ஊதிவிட்டாள். எடை கூடிக் கொண்டே இருக் கிறது. அவள் நடை அதன் இயக்கமும் தடை. பிள்ளைகள் செல்வம் கொடுத்துச் செழிப்பில் கெட்டுவிட்டார்கள் என்று பேசிக்கொள்கிறார்கள். சொன்ன பேச்சுக் கேட்ப தில்லை. பணியாட்கள் நாடகக் குழுவில் இருந்து வந்தவர் கள் போல் நடந்து கொள்கிறார்கள். எங்கும் எதிலும் உண்மை இல்லை; அதைவிட அவனிடமே எந்த நன்மையும் இல்லை. நல்லதே செய்து அறியமாட்டான். நாலு பேர் வாழ வழிவகை செய்யமாட்டான். எச்சில் கையாலும் காக்கையை ஒட்டமாட்டான். மிச்சம் மீதி எதுவும் பணியாட்களுக்கும் தரமாட்டான். 'இல்லை’ என்ற சொல்தான் அங்கு எதிரொலிக்கிறது. அவன் மனத்திலும் மகிழ்வு இல்லை; அதற்கு யார் பொறுப்பு? அவனே தான். மற்றவர்களை மகிழ்விக்க நினைக்காதவன் அவன் மட்டும் எப்படி மகிழ்வோடு இருக்க முடியும்? அலுப்புத்தான் அவர்கள் நிலுவையாக நிற்கும்.

விரும்பி உன்னிடம் வருகிறார்கள்; உன் சிறப்புகளைப் பேசிப் பாராட்டுகிறார்கள். நீ நடிகனாக இருந்தால் அவர்கள் ரசிகர்கள்; எழுத்தாளனாக இருந்தால் வாசகர் கள்; ஆசிரியனாக இருந்தால் அவர்கள் மாணவர்கள்; தலைவனாக இருந்தால் அவர்கள் தொண்டர்கள். மதிக்க வந்தவர்கள் அவர்களை அவமதித்து அனுப்பி விடுகிறாய்; பிறகு நீ தனிமையில் வாடுகிறாய். காரணம் நீ பிறரை மதிக்காமைதான். நீ உண்மையில் மகாமேதாவி என்று கர்வப்படுகிறாய். தலைக்கணம்; அதனால் உனக்குத் தலை வலி ஏற்படுவது தவிர்க்க முடியாது.