பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148



உனக்குத் தகுதி இருக்கிறது; மேலும் உழைத்து உயர்வு அடைக. நீயே உன்னைப் பற்றிப் பேசாதே. அஃது உனக்கு கேடாக முடியும், போட்டிகள் பெருகும். உன்னை வீழ்த்த மற்றவர்கள் முயல்வர். அடக்கம் அழகு தரும்.

35. தாழ்ச்சி நீக்குக

(கீழ்மை)

தட்டு ஒன்று தேடி அரிசியும் பொட்டும் வைத்து ஊட்டினாலும் கோழி குப்பையைத் தேடிச் சீச்சி அதைக் கிளறிப் புழுவும் பூச்சியும் தின் பதிலேயே நாட்டம் செலுத்தும், நாயைக் குளிப்பாட்டி நடுவிட்டில் வைத்தாலும் அது வாலைக் குழைத்துக் கொண்டு புழைக்கடைக்குத் தான் போகும். பிச்சைக்காரி அவளை வீட்டுக்கு அழைத்துத் தட்டு நிறைய சோறு போட்டாலும் அவள் மாடத்தில் அங்கங்கே ஒர் உருண்டை வைத்துவிட்டு 'அம்மா தாயே' என்று கேட்டு மறுபடியும் ஒன்று சேர்த்துத்தான் சாப்பிடுவாள். இப்படி ஒரு பழைய கதை. எவ்வளவு நல்ல நூல்களைத் தந்து படி என்று கொடுத்தாலும் கீழ்மக்கள் அவற்றைப் புரட்டிப் பார்க்க மாட்டார்கள். குப்பைக் கூளங்களையே அற்ப காசுக்கு வாங்கி மனத்தை அழுக் காக்கிக் கொள்ளுவர்; மாதம் ஒரு நாவல் இவற்றையே விரும்புவர். கொலை, கொள்ளை விறுவிறுப்பாகப் படித் துச் சுறுசுறுப்பாகப் படிப்பதில் ஆர்வம் காட்டுவர். 'ஆபாசம் அவர்களை இழுத்துப்பிடிக்கிறது. இஃது இன்று இளைஞர் மனம் கெடுவதற்குத் துணை செய்கின்றது. மட்டமான உணர்வுகளைத் தூண்டும் காதற் கதைகளைப்