பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150



மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள், 'புதுப்பணக்காரன் அப்படித்தான் இருப்பான்' என்று விமரிசிப்பதைப் பார்க்கிறோம். பணக்காரர்களில் இருவகை உண்டு என்று தெரிகிறது. பழையவர் பண்புடையவராக இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாம் வெறும் தோற்றம் தான். பணத்துக் கும் குணத்துக்கும் தொடர்பே இருப்பது இல்லை. பண்பட்டவர் செல்வம் பெற்றாலும் தம் இயல் பில் மாறுவது இல்லை; பழகியவரிடம் அன்பும் நண்பும் பாராட்டுவர்; பண்படாத கீழ்மையோர் ஒசி டீக்குச் சுற்றிய நாளில் காசில்லாமல் இருந்தபோது எப்படிப்பிறர் கையேந்தி வாழ்ந்தார்களோ அப்படித்தான் செல்வம் வந்தபோது பிறரைச் சுரண்டியே வாழ்கின்றனர். அவர்களிடமிருந்து எந்த நன்மையும் வெளிப்படுவது இல்லை.

பொன் தட்டிலே சோறு போட்டு ஊட்டினாலும் சொரிநாய் அஃது ஊர் சுற்றி எச்சில் இலைக்குத் தாவிச் செல்லும். எங்காவது விருந்து உண்டு அவர்கள் போடு கின்ற எச்சில் இலைக்குப்பை அங்கே மிச்சிலை நோக்கி வெறிபிடித்துச் செல்லும். அதுபோல ஒரு சிலருக்கு நல் வாழ்வு அமைத்துக் கொடுத்தாலும் அவர்கள் அந்தப் பழைய கும்பலை விட்டு வரமாட்டார். சூதாடும் களம், மாது ஆடும் களம் இப்படிக் களம் காணும் வீரராகவே செயல் படுவர்; உளங்காணும் முறையில் உவகை பெறவே விழைவர்.

அடுக்கிய கோடி தன்னை வந்து மிடுக்கினாலும் தகை மை சான்றவர் அதனை வெளிக்குக் காட்டார். அவர்கள் தம் செல்வச் செருக்கால் தலைக் கிறுக்கு அடைவதில்லை.