பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151


ஒன்று மில்லாதவன் முன்னையை விடக் கொஞ்சம் கூடுதலாகச் சம்பாதித்து விட்டால் அவனுக்குத் தலை கால் தெரிவது இல்லை. வீட்டில் மனைவியை அதிகாரம் செய் வான்; வெளியே அளவுக்கு மீறிய ஆடம்பரம் தலை காட்டும்; அவனைப் பிடிக்கவே முடியாது.

ஒருவன் காலுக்குச் செருப்பு வாங்கச் சென்றான்; அவன் நடக்காத கடை இல்லை, பார்க்காத செருப்பு இல்லை; ஒன்று கூட அவனுக்குப் பிடிக்கவில்லை. எவ் வளவு விலை உயர்ந்த செருப்பாக இருந்தாலும் என்ன ? அதைக் காலில் தான் போட்டுக் கொள்ளப்போகிறான். கண்ட இடத்தில் நடக்கப் போகிறான். தேவைக்கு மேல் ஆடம்பரம் விரும்புவர் பலர் உள்ளனர். இன்று அது நாகரிகம் ஆகிவிட்டது. பணம் கொஞ்சம் வந்துவிட்டால் இப்படி வீண் ஆடம்பரத்துக்குச் செலவு செய்கின்றனர். இவர்கள் மேன்மை என்று இவற்றைக் கருதுகின்றனர்: இது தாழ்மை என்றே கருதப்படும்.

ஒரு சிலர் சிடு சிடு' என்று சிற்றம் காட்டுவர்; அவர் களுக்கு அமைதியாக நடந்து கொள்ளவே தெரியாது. எரிச்சல் எதிலும் உளைச்சல், அதுமட்டும் அன்று: கருணை காட்ட மாட்டார்கள். பிறர் துன்பப் பட்டால் அதைக் கண்டு மகிழ்வர். எடுத்ததற்கு எல்லாம் சினம் கொள்வர்: இவர்கள் கீழ்மைக் குணம் படைத்தவர் ஆவர்.

பழமை பாராட்டும் பண்பு சான்றோர் பால் காணப் படும். சிறு வயதிலிருந்து தெரியும், நல்ல பழக்கம்: அத னால் சில நன்மைகள் தேடி இவரிடம் வந்தால் தம்மா லான உதவிகளைச் செய்வர். இவர்கள் சால்பு உடை