பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152


யவர் கீழ் மக்கள் எரிந்து விழுவர்! உன்னை யார் இங்கு வரச் சொன்னது?" என்று கேட்பர். பழமையைக் கிளறுவதை அவர்கள் உளறுவதை இவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. மேன்மக்கள் பழமை பாராட்டுவர். கீழ் மக்கள் அதனை மறப்பர்; நண்பரைத் துறப்பர்.

புல்லைக் கொண்டு வந்து போட்டுக் கொழுக்க வளர்த் தாலும் எருது எருதுதான். அதனைத் தேரில் பூட்ட இய லாது. ஏர் உழத் தான் பயன்படும். கீழ் மகனை எவ் வளவு தூரம் மேலுக்குக்கொண்டு வந்தாலும் அவன் அந்த இடத்துக்குப் பயன்பட மாட்டான். உயர்வுகளுக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ளமாட்டான். யார்யாரை எங்கு வைக்கவேண்டுமோ அங்கு வைத் தால்தான் அவர்கள் செயல்படுவர்.

36. கசடு அற வாழ்க

(கயமை)

கசப்பான செயல்களைச் செய்பவர் கயவர் எனப் படுவர். யார் யார் எத்தகைய கசப்புகளைச் செய்கின் ற்னர்? நாலடியார் கூறுவன இவை: மகன் இளையன்; என்றாலும் இன்பத்துக்கு வளையான் ; கட்டியவளோடு ஒட்டி உறவாடுகிறான். வாழ்க்கை அன்பில் சுழல்கிறது: அமைதி தவழ்கிறது, பிரச்சனையே இல்லை. தந்தை முதியர்; என்றாலும் புது தாரம் வேண்டும் என்கிறார் மனைவி புனிதவதியாகி விட்டாள். இவர் இச்சைக்கு அவள் பச்சைக்சொடி காட்ட மறுக்கிறாள். பணத்திமிர்