பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157



'மகளிர் தம் நிறையைக் காத்துக் கொள்ளவில்லை என்றால் சிறைகாக்கும் காப்பு என்ன செய்யும்?' என்றார் வள்ளுவர். அது முற்றிலும் உண்மை. காவல் எவ்வளவு வைத்தாலும் ஒருத்தியின் ஆவலைக் கட்டுப்படுத்த இயலாது. அவள் நினைத்தால் எவ்வளவு காவல் இருந்தாலும் அதை மீறித் தன் விருப்பை நிறைவேற்றிக் கொள்வாள். தவறியவள் திருந்துவது கடினம். அவரவர் மனக் காப்பே தக்க காப்பு ஆகும்.

மனைவி நல்லவளாக வாய்ப்பது அதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்; "சற்று ஏறுமாறாக நடந்து கொண்டாள் கூறாமல் சந்நியாசம் கொள்' என்றார் அவ்வையார் . ஏன்? யாரைப்பார்த்து இவ்வாறு கூறினார். 'எறி' என்று கூறி எதிர் நிற்பாள். கணவனை எதிர்த்து அவன் சீற்றத்தைத் துண்டுபவள்; இவளை எமன்' என்று தான் கூறவேண்டும். வேளைக்குச் சோறு சமைக்க மாட்டாள். கேட்டால், 'நான் ஏன் சமைக்க வேண்டும்? பெண் என்றால் அடுப்பு ஊதவா? என்று கேள்விகள் தொடுப்பாள்' இவள் இரண்டாவது ரகம்; இவளை என்ன என்று கூற முடியாது! 'தீராத நோய்' என்றுதான் இயம்ப வேண்டும். சமைத்து வைப்பாள்; இலை போட்டுச் சோறு போடமாட்டாள். கேட்டால் 'அது கூட நீ போட்டுக் கொள்ளக்கூடாதா?' என்று அடம் பிடிப்பாள். இவளைப் பேய்' என்றுதான் கூறமுடியும். இந்த மூவரும் கொண்டவனைக் கொல்லும் படையாவர்.

ஒருத்தியை மணந்தான்; அவள் அழகி என்பதால்; அவளை அணைந்தான்; அவள் இவனை விட அழகனைத் தேர்ந்து ஒடிப்போய்விட்டாள். மற்றொருத்தியை உடனே மணந்தான்; அவள் நோயாளி; இவனுக்குச் செலவுவைத்து விட்டுச் சென்று மறைந்தாள். நாள் சில கூட ஆகவில்லை.