பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158



'மணமேடை’ என்ற விளம்பரத்தைப் புரட்டிக் கொண்டு இருக்கிறான். இவனைப் போல அறிவிலி யாரும் இருக்க மாட்டார்கள். இனிப் பணக்காரி என்று தேடுவான்; அவளுக்கு இவன் 'எடுபிடி ஆவான். கடைசிவரை இப்படிப் பட்டவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு தான் இருப்பார்கள். பெண்டாட்டி இல்லாமல் இவர்கள் வாழமாட்டார்கள். கேட்டால் ஒண்டிக் கட்டையாக எப்படி வாழ்வது? என் பார்கள், படட்டும் துயரம்; இவர்களைத் திருத்தவே முடியாது. தவம் செய்து அறிவு தேடித் தனித்து இருந்து அமைதியாக வாழ்வது மிக உயர்ந்த வாழ்க்கை. இது தலையாய வாழ்வு. அடுத்தது மனைவி; பின் மக்கள் இந்த வட்டத்துள் அகப்பட்டு உழல்வது. இரண்டாம் தரமான வாழ்க்கை; இதற்கு இல்லறம் என்று பெயர் கொடுத்துச் சிறப்பிக்கின்றனர். மூன்றாவது உழைப்பு இன்றித் தன் மானம் விட்டு யார் பின்னாலாவது சென்று அடிபணிந்து அடிமையாக வாழ்தல்; இது கடைநிலை வாழ்க்கை.

சாதிகள் இல்லை என்பார்; ஆனால் வீட்டில் இருப்பவள் அவளைத் தன் பெண் சாதி' என்று பேசுவர். காய்களில் ஒன்றனைச் சாதிக்காய்' என்பர். நாமும் இந்தச் சாதிப் பிரிவினையை ஏன் விடவேண்டும்? இட்டார் பெரி யோர் இடாதார் இழிகுலத்தவர் என்று தமக்குப்பட்டதை முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். அவர்கள் மதம் அது; எமக்கும் அது சம்மதம்; புதுவகை சாதி இந்த நாலடிகாட்டத் தொடங்குகிறது. இஃது உண்மைதானா? இந்தப் பகுப்புப்படி முற்பட்டவர்: இடைப்பட்டவர்; பிற்பட்டவர் என்று இப்படிப் பலவகைப்பட்டவரைத் தம் அறிவுக்கு எட்டியவரைப் பிரித்துக் காட்டுகிறது.

அறிவுப் பசியால் நூல்களை நுணுகி ஆராய்வர்; ஏட்டை வைத்துக் கோட்டை வகுப்பர். இவர்கள்