பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159



நூலோர் அடுத்த சாதி இடைப்பட்ட சாதி; இவர்கள் நடுநிலைவகிப்பவர்; மத்திய தர வகுப்பினர் என்பர். படிப்பு தொழிலுக்கு என்று முடித்துக் கொள்வர். அதற்கு மேல் பத்திரிகைகூடப் புரட்டிப் பார்க்க மாட்டான்; கேட் டால் அந்தப் பழக்கம் இல்லை என்பான். வீட்டில் எல். கே. ஜி. படிப்பவனுக்கு ஏ.பி.சி.டி. கற்றுத் தருவான்; மனைவியின் ஆணை ஏற்றுக் கறிகாய் வாங்கி வந்து நறுக்கிக் கொடுப்பான். இவன் குடுமி களைந்தவிட்ட குடும்பியாய் வாழ்வான்.

மூன்றாவது இன்று உரிமைக்குக் குரல் கொடுக்கும் கடைநிலை வகுப்பாளன் அவன் சோற்றுக்கே தாளம் போடுவான்; அதுவே சுவர்க்கம்; அதற்காகக் காசு ஈட்டக் காலம் எல்லாம் உழைப்பான். உழைப்புத் தெரியும்; வேறு எந்தப் பிழைப்புக்கும் போகமாட்டான். அடி மட்டத்து முழு முட்டாளாக வாழ்வான். இது மூன்றாம் நிலை. இது நாலடியார் வகுப்பு.

நூலைப் போலச்சேலை; தாயைப்போல மகள் என்று உவமை கூறுவர். 'வாலைப் போலத் தலை; தலையைப் போல வால் என்று யாரும் கூறவில்லை. தலை உருட்டு; வால் நீட்டு.

விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று காய்க்காது. இதுவும் இதற்கு நிகரான ஒர் உவமை. மற்றொன்றையும் சொல்லி முடிக்கிறோம். நெல் விதை போட்டால் அதே ரகம்தான். நெல்லூர் அரிசி என்றால் அது வேலூரில் விளையாது. அதுபோல் தந்தை அறிவு மகன் அறிவு' என்று நாலடியார் கூறுகிறது. எனவே மகன் அறிவாளி