பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160



யாக இருக்க அவன் தந்தையும் ஒரு காரணம் என்பது தெரிகிறது. இது வருணாசிரம தருமத்தின் ஒரு பக்கம். தந்தை சிற்பியாக இருந்தால் மகன் கையில் சிற்றுளி பிடிப்பான்; வித்தியாசம் காலம். சில சில வேறுபாடுகள் இருக்கலாம். அடிப்படையில் அப்பனைத் தோல் உரித்துப் போட்டது போல அவன் மகன் இருக்கிறான் என்று பேசக் கேட்கிறோம், இஃது எப்படி? சிந்தித்துப் பார்க்கவும்.

யார் எப்படி என்று கேட்டால் உருப்படியான பதில் கூறமுடியாது. இன்று வாழ்கின்றவர் நாளை தாழ்வார், சொல்ல முடியாது. இன்று கோடிக்கு உரியவர் நாளை அவர் ஊர் தெருக்கோடிக்குப் போவதும் சகஜம்தான். 'அறிவு மேதை" என்றாலும் ஏதாவது அவசரப்பட்டுச் சில உண்மைகளைத் தெரிவிக்கிறான். உலகம் தாங்காது; அவன் தலைக்கு விலை பேசுவது இன்றைய அறியாமை, யார் எப்படி ஆவார்கள் என்று கூறமுடியாது. குபேரன் குசேலனாக மாறலாம்; குசேலன் குபேரனாக மாறலாம் என்று கூறுகிறார்கள். எதுவும் தலைகீழாக மாற வாய்ப்பு உள்ளது. இதை வைத்துத்தான் இன்றைக்கு இருப்பார் நாளைக்கு இல்லை' என்று பட்டினத்து அடிகள் யாரோ நினைவில் இல்லை; கூறி இருக்கிறார்கள். எல்லாம் தலை கீழாக மாற வாய்ப்பு உள்ளது. நிலவரம் அப்படி பங்குச் சந்தை விவரம் இப்படி.

அவன் செஞ்சிக் கோட்டை வாலிபன். இவன் வஞ்சிக் கோட்டை இளையன். இருவரும் ஒரு சாலை மாணக்கர் . ஒரே தட்டில் சோறு, கட்டில் மட்டும் வேறுபட்டன. காரணம் சொல்லத் தேவை இல்லை. காலம் அவர்களைப் பிரிக்கிறது; பிரிந்துவிட்டார்கள். ஒருவன் கோட்டையில் அமைச்சர் பதவி மற்றவன் எல்லாம் நஷ்டப்பட்டு