பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

161

 ஒன்றும் இல்லாமல் படம் எடுத்து போண்டி ஆனவன்; ஆண்டியாகிவிட்டான். அமைச்சன் இவனுக்கு நண்பன். அமைச்சனைப் பார்த்து உதவி கேட்கச் செல்கிறான். பி.ஏ. பட்டதாரி அல்ல; P.A. என்பதைத் தமிழில் இப்படித் தான் சொல்கிறார்கள். "ஐயாவைப் பார்க்க இயலாது. அதற்கு முன் அனுமதி தேவை என்கிறான். இவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. நண்பன் நடராசன் என்று போய்ச் சொல்' என்று அனுப்புகிறான். பார்க்க முடியாது' என்று பதில் சொல்கிறான். அன்று ஒசியில் சிகரெட்டுப் பிடித்த இந்தக் காசி விசுவநாதன் இன்று அமைச்சன்; இவன் மனம் நொந்து வீடு திரும்புகிறான். மனைவி கேட்கிறாள் 'வெட்கமில்லையா? நண்பன் என்று அலட்டிக் கொண்டாயே" என்று அவள் நையாண்டி செய்கிறாள். அந்த அமைச்சு நடந்து கொண்டது சரி யாகப் படவில்லை. இவர்களை மாற்றவே முடியாது. பதவியில் உயர்ந்தவர் உதவி செய்யாமல் இருப்பது அவர் களுக்குச் சிறுமை; சீர்கேடு என்று நாலடி நவில்கிறது.

பூச்சூடி வந்த பூவை; அவள் ஊர் புதுவை; அவள் செய்து கொண்டாள் சிலரை வதுவை; அவள் இப்பொழுது விதவை. அவள் திறந்து வைக்கிறாள் கதவை. இன்று அவள் யாருக்கும் உரிமை இல்லை. அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அவள் அழகில் மயங்குகிறான்; உள்ளதை இழக்கிறான்; பொருள் வற்றிவிட்டது; அவன் சுற்றம் அற்றுவிடுகிறது. அவள் புது வெள்ளம்; அப்படித் தான் இருக்கும். அது விரைவில் வற்றிவிடும். பொது மகளிர் உறவும் புது வெள்ளத்தின் வரவும் ஏறக்குறைய ஒன்றுதான். அவை நீடித்து நிற்பவை அல்ல; எனவே பூவையரைக் கண்டுமயங்காதே; புதுமை கண்டு மருளாதே.

11