பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

காட்டுப் பசுபோலக் குழைந்தாள்; பழகினாள்; அழகினாள்; கேட்டுப் பொருள் பெற்றுவிட்டாள். இன்று பச்சைக் கொடி காட்ட அவனிடம் பசுந்தாழை இல்லை. அவள் இச்சைப்படி இருந்த மிச்சமெல்லாம் கொட்டி அழுதுவிட்டான். அவன் வாழ்வு பழுது ஆகிவிட்டது. இந்த ஊரார் அவனைத் தொழுது வாழ்ந்தவர்; இன்று புழுதி என்று அவனைத் துாற்றிப் பேசுவர். அவன் வாழ்வு பழுது ஆகிவிட்டது; பாழ்பட்டது அவன் வாழ்வு.

சின்ன மனுஷன் அவன் சீரழிந்து விட்டான்; அவன் வாழ்வு பின்னப்பட்டுவிட்டது. கன்னிப்பெண் என்று அவன் கருத்து இழந்தான்! கவிதைப் பெண் என்று அவள் ரசிகையானான். இன்று பிறர் கைகொட்டிச் சிரிக்கும் அளவுக்கு அவள் கைக்கு எட்டியவரை அளந்து கொடுத்தான்; பெருமை இழந்தான், சிறியவன் ஆனான்.

உள்ளத்தில் கள்ளம், உதட்டில் அன்பு மொழி வெள்ளம். இப்படி இருவேறு நிலை. பிறரை மயக்குவது அவர்கள் கலை; அவன் அவர்களுக்குக் கொடுப்பது அதிக விலை; பேசுவது மானம்; நடத்துவது இழி தொழில், ஏசு வது பிறர்செயலை: காசுவது தம் உடலை. அதை அடைய விரும்புகிறான்-இந்த விடலை; அந்த உடல் சிறிது நேரத் துக்குக் காட்சி; விரும்பினால் அஃது ஆட்சி; பலருக்கும் பகிர்ந்து அளிப்பது அவள் மாட்சி, இவள் மனம் பல வகைப்பட்டது. இதற்குத் தேவை இல்லை. சாட்சி.