பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165


39. வாழ்க்கைத் துணை நலம்

(கற்புடைய மகளிர்)

கற்பின் பெருமை

எண்ணிப் பத்துக் காசு இட்டால் இந்திரன் மனைவியும் வெண்ணெய் உருகுவது போல அந்தக் காசு வீசும் கண்ணியவானிடம் செல்வாள் என்று சொல்லுவார்கள். பிறன் ஆடவன் எவனையும் நோக்காத சீரிய பெண்மை உடையவள் பத்தினி எனப்படுவாள். அத்தகையவளே மாட்சிமை நிரம்பியவள். அவளே மனைவி என்பதற்குத் தகுதி பெறுகிறாள். வாழ்க்கைத் துணைவி என்று கூறிக் கொள்ள அவளுக்கு அருகதை உண்டு. மற்றையவர்கள் ஏதோ ஒட்டி உறவாடுவார் என்றுதான் மதிக்கப்படும். கற்பே பெண்ணுக்குப் பெருமை சேர்க்கிறது. அத்திண்மை வாய்க்கப் பெறின் பெண்களுள் அவளைவிடச் சிறந்தவள் வேறு ஒருத்தி உளர் என்று உரைக்க இயலாது.

சிக்கனம்

குடத்து அளவு நீரே கிடைக்கும் வறுமை உற்ற காலத்தும் கடலே புரண்டு வருவது போலக் கிளைஞர்கள் சுற்றத்திர் விருந்து என்று வந்தால் அவர்களை அருந்த வைக்கும் மனத் துணிவும் செயற்பாடும் மிக்கவள். மனைவி என்று மதிக்கப்படுவள். விருந்து கண்டபோது என் செய்வது என்று விம்மும்; கம்மிய குரல்கள் அவை அவர்கள் இயலாமையை வெளிப்படுத்தும்.

வீட்டுக்குச் சுவர் வைத்தான்; அது வீண் என்று இடிந்து விழுகிறது. இலைகளை வைத்துக் கூரை வேய்ந்தான். அவை வலைகளாகக் கிழிபட்டுச் சிதறிவிட்டன. ஒழுகல் கூரை அழுகல் சுவர்கள்; வழுக்கல் தரை. இதில் எங்கே படுப்பது: எப்படி உடுப்பது; எப்பொழுது சமைப்