பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166



பது எப்படி நடத்துவது குடித்தனம்; இங்கு இருப்பது மடத்தனம் என்று தன் துரைத் தனத்தைக் காட்டாமல் சாமர்த்தியமாக ஒன்றி வாழ்வது அது மனைவாழ்வு: ஒட்டைச் சட்டிதான்; கொழுக்கட்டை வேகும் என்று கொழுநனிடம் உரைப்பவளே பழமுதிர் சோலை ஆவாள். மற்றவர்கள் பாலைவனச்சாலை ஆவர்.

மாண்புகள்

அவன் எப்படி அவளைத் தேர்ந்து எடுத்தான்? அவள் தகுதிகள் யாவை? பார்க்க லட்சணமாக இருக்கிறாள்; அவள் கணவனை மகிழ்விக்கவே உடுத்துகிறாள். அச்சம். நாணம் இவை அவளிடம் பிச்சை கேட்டு இடம் பெறுகின் றன; ஊரார் மெச்ச அவள் வாழ்க்கை அமைத்துக் காட்டு கிறாள். வெட்கம் அவளைப் பிடுங்கித் தின்ன அவனிடம் வேடிக்கையாகப் பேசுகிறாள்; ஊடலும் கொள்கிறாள். உப்புக்கரிக்காமல் பின் உபகாரியாக மாறுகிறாள். கொஞ்சிப் பேசிக் குலவ இடம் அளிக்கிறாள்; காதல் செய் கிறாள். இவள்தான் அவன் தேர்ந்தெடுத்த பெண்; அவள் அன்று மணப்பெண்; இன்று குணப் பெண். வீட்டு மனைவி.

மனைவியின் கூற்று

"என்றைக்கும் என் கணவர் எனக்குப் புதியவர்தான்; பழ கியவர் என்பதால் உடனே குழைந்து அவர் அழைப்புக்கு இழைவது இல்லை. "வெட் கம்' அது என்னைவிட்டுக் கெடு வது இல்லை. நாணம் அஃது என்னை விட்டு விலகுவது இல்லை. ஐயா இந்தப் பரத்தையர் இவர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமே இல்லை. கண்டவுடன் கருத்து இழப்பர். பொறுத்துப் பழகார். இழுப்புக்கு இழை வார். அவர் அழைப்புக்கு அலைவர். வெட்கக்கேடு :இல்லை இவர்களுக்கு மானம் சூடு.'