பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168



'பாணனே நீ வீணன் தான்; அளக்கின்றாய்; வளமான வார்த்தைகளைக் கொண்டு. அவள் காட்சிக்கு இனியள், யான் மாட்சிக்கு உரியள்' என்றெல்லாம் பேச்சுக்குச் சொல்கிறாய். உடுக்கை அதற்கு இருகை; இடக்கை, வலக்கை; வலக்கைதான் ஒசை பெறுகிறது. தட்டுவது அங்கே: முட்டுவது இங்கே. உறவாடுவது அங்கே ஒட்டுவது இங்கே. பாணனே! தேவாரம் பாடி மகிழ்வது அங்கே. வீட்டுத் தாழ்வாரம் தேடுகிறார் இங்கே. நிறுத்து உன் ஆரவாரம்; சென்று வருகிறார் அங்கு வாராவாரம்; அதை மறுத்துப் பலனில்லை. நிறுத்து உன் தூது; இதை அவரிடம் ஒது.

'வளம் மிக்க வயல்களை உடைய ஊரன் அவன் என் தலைவன். ஈ வந்து அவனைத் தொட்டாலும் உடனே அதை ஒட்டிவிட்டு மறுவேலை பார்ப்பேன். இன்று தீ ஒட்டியதுபோல அவள் அதுதான் அந்தப் பரத்தை அவளை ஒட்டிக் கொண்டு இருக்கிறார். இதை எப்படி நான் தட்டிக் கேட்காமல் இருக்க இயலும்? பாணனே அவள் தோள் தழுவிய என் கோனக் கேள் என்று எப்படிக் கொள்வேன். நீ இது முறையா? அவனைக்கேள்.

'என் கணவர் எனக்கு மட்டும்தான் சொந்தம்; அவர் காட்டுவது பந்தம் என்றாலும் அவர் என்னை இழுத்துத் தழுவுவது நிர்பந்தம்தான். வெட்கம் என்னை விட்டுக் கெடுவது இல்லை. அவர் தொடும்போது எல்லாம் எனக் குப்புதுமை; விலகி நிற்பது என் பழமை. அவருக்கும் எனக் கும் உள்ளது கிழமை. இந்த ஊர்ப் பரத்தையர் புதுப்புது ஆட்களோடு வதுவை கொள்கின்றனர். புன்சிரிப்பு: அவர்களுக்கு மத்தாப்பு, கேடு கெட்ட பெண்கள்; தேடினாலும் இத்தகையர்கள் கிடைக்கமாட்டார்கள்.