பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169


'வண்டு மொய்க்கும் மலரினான்; அவன் என்னைக் கண்டுகொள்வதே இல்லை. அவன் எனக்கு அருளும் என்று கூறுகிறாய், அது வெறும் மருளே. இன்று நான் அவனுக்கு நுனிக் கரும்பு, பரத்தை அடிக் கரும்பு. அவள் அடியை அவன் விரும்புகிறான். அவன் அவள் மடியைப் பிடித்து விட்டான். இனி நீ இடை வந்து இணைக்க வந்தால் அமையும் உனக்கேவசை. வெல்க பாண செல்க அவரிடம்."-இவை தலைவி கூற்று. -

40. காதல் பாட்டு

(காமத்துப் பால்)

பசலை; அது என் நிறத்தை மாற்றும். என் விசனத்தை எடுத்துக்காட்டும். விளர்த்து விட்டேன் என்ப தைக் கிளர்த்திவிடும். அவர் என்னைத் தழுவுவார்; சிறிது நழுவிவிட்டால் உடனே இந்தப் பசலை என்னை இறுகப் பிடித்துக்கொள்ளும். முயங்காத இடத்து இந்தப் பசலை வந்து பாயும். அவரோடு கூடுவது; அதனோடு நிற்பது சுவை தருவது இல்லை. ஊடுவதும் தேவைப்படுகிறது. உப்பில்லாப்பண்டம் குப்பைபிலே ஊடல் இல்லாத கூடல் அதில் நயம் இல்லை, அழகு இல்லை. அறிவுச்சுவை இல்லை. ஊடி விடுகிறேன் அதுவே நீடித்துவிடுகிறது கூடுவதற்கு நேரம் கிடைப்பது இல்லை. வாள் போல் வைகறை வந்து தோள் தோய் காதலரைப் பிரித்து விடுகிறது.

பொருள் தேடிச் சென்ற காதலர் மழைக்காலம் வரும் முன் விழைந்து வருவதாகச் சொற்கள் இழைத்தார். நாள் ஒற்றி என் விரல்கள் தேய்ந்து விட்டன வழி பார்த்து விழி