பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170



கள் பொலிவிழந்து விட்டன. எங்கள் மண நாள் முரசு போல இடி முழக்கம் கேட்கிறது. மழை வருகிறது என்பதால் ஊரவர் மகிழ்கின்றனர். நான் மட்டும் ஏன் மகிழ முடியவில்லை. மழை நீர் என் கண்ணீராக மாறுகிறது. பிரிவு அரிது சாப்பறைபோல அது எனக்கு விளங்குகிறது. நெய்தல் பறை இரக்க உணர்வைக் கிளறுகிறது. அது போல இந்த மழை பெய்தல். என் அழுகைக் குரலை அதிகப்படுத்துகிறது. காரோ வந்தது; அவர் தேரோ வர வில்லை; யாரோ என் துயர் அவருக்கு அறிவிப்பர்?

கம்மியத் தொழில் செய்யும் கருமகன்கள் தம் கருவிகளை ஒடுக்கிக் கட்டி வைத்துவிட்டனர். உலைக்களத் தீ அணைந்துவிட்டது. அவர்கள் ஒய்வு எடுத்துக் கொள்ள வீடு திரும்புகின்றனர். மாலைப் பொழுது பூமாலை தொடுத்தாள் தலைவி, மாலை மாலையாகக் கண்ணிர் வடிக்கிறாள். பொன்மாலைப் பொழுதாகக் கழிய வேண்டிய அது புன்மாலையாகிவிட்டது. தன் துணைவர் தன்னோடு இல்லை. இணையில்லாத இன்ப வாழ்வு அவளை விட்டு இரிந்துவிட்டது. கனவுகள் முறிந்து விட் டன. இன் பப் பொழுது சரிந்துவிட்டது. மாலை மயக் கத்தில் அவர் உழன்று வருந்தி அலமருகின்றாள். என் செய்வது? ஆற்றுவது என்பது இயலாத ஒன்று; அவர் வருகைதான் மாற்றம் செய்ய இயலும். அதுவரை இப் படித்தான் மாலைப்பொழுதுகள் மாலை தந்து அந்த மாலாவை அழச் செய்துகொண்டுதான் இருக்கும். அவள் மட்டுமா? கன்னிப் பெண்கள் கதைகளைக் காவியத்தில் தீட்டினால் இந்த அழுகை என்பது அழியாத அத்தி யாயம். பிரிவு அது பாலை; அவர் வந்துசேர அவள் காத் திருக்கிறாள் அதனால் அது முல்லை; வேறுவழியே இல்லை;