பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172



தலைவன் பின் சென்ற தலைவி குறித்துத் தாய் வருந்துதல்

அரக்குப் போன்று சிவந்த ஆம்பல் அன்ன இதழ்களை உடையவள்; பருக்கைக் கற்களை உடைய தெருக்களில் அவள் எப்படித்தான் நடந்தாளோ? இதற்கு முன் கால் சிவப்பு ஊட்டச் செம்பஞ்சுக் குழம்பு பூச அவள் பைய பைய' என்று வருந்திக் கூறுவாள். பஞ்சு கொண்டு மெல் லப் பூசினும் அஞ்சும் அவள் மெல்லடிகள். அந்தப் பரற் காட்டை எப்படித்தான் கடந்து செல்கின்றனவோ! தலைவன் உடன் போவதில் காடும் அவளுக்குக் கரடுமுரடு என்று படவில்லை; அதுவியப்புதான்.

தலைவியின் பிரிவுத்துயர்

ஒலைக் கணக்கர் அவர்களும் தம் பணிகளை முடித்து வைத்துவிட்டு மாலைப் பொழுதில் ஒய்வு கொள்கின் றனர். அத்தகைய புன் மாலைப் பொழுதில் வானத்தைப் பார்க்கிறாள். சிவந்த வானம் அதுவும் கரியப் போகிறது, அந்நேரத்தில் தன்னை மணந்தவன் இப்பொழுது தணந்து தன்னைவிட்டுப் பொருள் தேடப் புது இடம் தேடிச்சென்று விட்டான். அவன் வருகைக்கு ஏங்கும் இவ்வறியவள் சூடிய மாலையை அறுத்து எறிந்துவிட்டு அழுகிறாள். முலை வனப்பு? அதன்மீது கொண்ட வனப்புப் பூசிய சாந்தத்தை ஏசியவளாய்க் கலைத்து மனம் குலைகிறாள். மாலை வரு வார் என்று வழி பார்த்தாள். பூப் புனைந்தாள்; பூசிய சந் தனம் பூவைக்கு வெறுப்பைத் தந்தது. அலங்கரித்துக் கொண்டிருந்த அவள் கலங்கியவளாய்க் கலுழ்கின்றாள்,