பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

173


தோழியுடன் தலைவி உரையாடல்

'காளை ஒருவன் வழி நடத்த நாளை அவன் பின் எப்படி நடப்பாய் என்று வினவுகின்றாய்! குதிரை ஒருவன் பெறுகிறான்; முன்பின் ஏறியது இல்லை. அதற்காக அந்தக் குதிரையை அவன் கட்டு அவிழ்த்தா விட்டுவிடுவான். அதில் ஏறிச் செல்ல அவன் தானாகக் கற்றுக் கொள்கிறான். 'ஏய் எப்படி முடிந்தது என்றா அவனைக் கேட்டுக் கொண்டிருப்பர். அப்பொழுதே வரும் வேகம்: அதற்கு ஏற்ற விவேகத்துடன்." என்கிறாள் தலைவி.

பிரிந்த பின் தாய் மகன் செயலை எண்ணிப் பார்த்தான்

'நேற்று என்னை வந்து என் மகள் மார்போடு கட்டி அணைத்து எனக்கு முத்தமிட்டாள்; புல்லினாள்; தழுவினாள்; விம்மினாள்; எனக்கு வியப்பு ஏற்பட்டது; அதற்கு அப்பொழுது அறிகுறியாது என்பதை அறியேன். என்ன! இவள் திடீர் என்று சிறு குழந்தையாகி விட்டாளே என்று வியந்தேன், முகத்தில் அவள் வியர்வை முத்து எனத் தெரிந்தது. அவள் என்னைச் சேர்த்து அணைத்துக் கொண்டது ஏன்? காளை அவனோடு மறுநாளை அவள் செல்லத் துணிந்தது அறியேன். வேங்கை கண்டு வேகமாக ஒடும் மான் கூட்டம் நிறைந்த காட்டுவழியே அவள் செல்லத் துணிந்து விட்டாள் என்பதை இப்பொழுதே கேட்டு அறிகிறேன். அவன் வேட்டது அது; அதற்கு அவள் காட்டியது அது.