பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

துக் கொண்ட சுண்ணாம்புச் சரக்கு தக்கோலம் போட்டு இவள் இந்தப் புதுக்கோலம் பூண்டிருக்கிறாள். வாய் கமழ்க்கிறது. எல்லாம் அந்தப் பாக்கு வெற்றிலைதான்; அதனோடு சேர்த்து வாசனைப் பொடிகள் கமழ்க்கின்றன. நீ 'மகிழ்க்கலாம்' என்று கருதுகிறாய். எல்லாம் வெறும் பூச்சு தீய காற்று அவள் விடும் மூச்சு. ஆபாசம் அது தான் அவள் சகவாசம்.

நீ அறச் செயல்களுக்கு முதன்மை இடம் தருக ; அஃது உன்னை உயர்த்தும். தோல் அழகைக் கண்டு நீ துவண்டு போகாதே; வாலை இளங்குமரிதான் என்றாலும் அவள் தசைப் பிண்டம்; இதை மறந்துவிடாதே; கொழு கொழு வென்று இருப்பதும், மிருதுவான மென்மையும் அவள் ருதுவான புதுமைகள்; கவர்ச்சி, அவள் மேனி சுருங்கும்; கண்கள் ஒடுங்கும்; கைகால்கள் நடுங்கும்; வாழ்க்கை ஒரு நாள் உணங்கும்."

என்னை வெறியன் என்கிறாய்; உளறுகிறேன் என்று கருதுகிறாய். "அவள் கண்கள் நீரில் தோன்றும் குவளை: அங்கே அதன் அயல் பாய்ந்தோடும் கயல் மீன். உன்னைத் தாக்குவதால் 'வேல்' என்று எல்லாம் நீ என்னிடம் அளக்கின்றாய்! அதைக் கவிதை என்று கூறி உன்னையே நீ உயர்த்திப் பேசிக்கொள்கிறாய்!"

"கவிஞரே! என்னுடன் வாரும் இடுகாட்டில் வந்து பாரும்; அங்கு இருக்கமாட்டார் யாரும்: இதோ! இது மண்டை ஓடு, மயிர் முளைத்து இருந்த ஓடுதான் இன்று வெறும் கூடு, சுட்டு எரிபட்ட மண்டை; சதை இல்லை; குழி விழுந்து கிடக்கிறது. கண் நோண்டி எடுத்துவிட்டார்.களா? இல்லை; அது பற்றி எரிந்து பசையற்று விட்டது