பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


6. கூறாமல் சந்நியாசம் கொள்

(துறவு)

இருள் உன்னைச் சூழ்ந்து கிடக்கிறது; அதை நீக்க ஒளிக்கதிர் தேடுகிறாய்; குச்சி கொண்டு கொளுத்துகிறாய்; குத்துவிளக்கு எரியவைக்கிறாய். கும்மிருட்டுக் கம்முகிறது. ஒளி வீசுகிறது. மறுபடியும் விளக்கு அணைகிறது; இருள் சூழ்கிறது; இது என்ன விளையாட்டு? சிறுவர் விளையாடும் கண்ஆம்மூச்சி; விளையாட்டா? ஒளி தவம்: இருள் மருள்.

தவம் செய்கிறான்; அவன் பாவம் நீங்குகிறது; தவம் கெடுகிறது; பாவம் வந்து சுடுகிறது. இதுதான் இந்த மின்மினி விளையாட்டு; கண்மணி! பாவம் செய்யாதே; தவத்தை மேற்கொள்.

அவன் அறிவாளி; சிந்துத்துப் பார்க்கிறான்; ஞானம் பெறுகிறான்; "செல்வம் நிலைக்காது; நோய் விலக்கினாலும் அவனையே இலக்காகக் கொள்ளும் நண்பன்; ஒட்டிக் கொண்டு உறவாடும் கிளைஞன், மூப்பு அவனுக்கு யாப்பு: அஃது அவனை இறுகக் கட்டி நடமாடச் செய்யாமல் அடக்கி வைக்கிறது சாக்காடு அவனை அழைக்கிறது. இந்த நான்கு செய்திகளையும் எண்ணிப் பார்க்கிறான். நண்ணுகிறது ஞானம். விளைவு அவன் இப்பொழுது துறவி."

தம் கடமை எது என்று எண்ணிச் செயல்படுகிறான் . அவன் எதற்குக் கவலைப்பட வேண்டும்? கவலைக்கே அச்சம்தான் காரணம், சாத்திரங்களை நாடுவதும் கோத்திரங்களைத் தேடுவதும் துறவிக்குத் தேவை இல்லை,