பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


7. மதங்கொண்ட யானை

(சினம்)

சினம் என்பது மதங்கொண்ட யானை; அதை அடக்கி ஆண்டால் அது பணிந்து நீ உயர ஏற வழி வகுக்கும். யானை மீது பவனி வர இந்த உலகம் உன்னைக் கண்டு பணியும்; பிறர் பகை தணியும். சினத்தை எப்படி அடக்குவது ? கொசு தொல்லைதான். அதற்காக நீ வீட்டையே கொளுத்த முடியுமா? ஈ உன் கையில் உட்காருகிறது; அதற்காக அதனைத் துரத்த நீ உன் கையை வெட்டிக் கொள்ள முடியுமா? பிறர் தரும் தொல்லைகள் அதற்காகக் கடக்க வேண்டாம் சினத்தின் எல்லைகள். அது நல்லது அன்று.

வீட்டில் பற்றாக்குறை; வெளியே தொடர்ந்து வரும் தொல்லைகள்; அவற்றிற்கு இல்லை எல்லை; சுமை தாங்கித் தாங்கி முதுகு வளைந்து விட்டது. "படமுடியாது இனித் துயரம் பட்டதெல்லாம் போதும்" என்று உயிர்விடத் துணிவது அவசரம், ஆவேசம், இது வாழ்க்கையைச் சினப்பது. அறிவுடையவர்கள் எதையும் சீர் தூக்கிப்பார்ப்பர். துன்பம் உலக இயற்கை ; அதற்காகப் பொறுமையை இழக்காமல் யார் மீதும் சினக்காமல் தன் கடமை மீது கருத்து ஊன்றுவர்.

"யாகாவாராயினும் நாகாக்க" என்று சோ காக்கும் வழி கூறினார் வள்ளுவர். சோ காக்க என்று கூறுவதால் அவரையும் :"சோ" என்று கூறலாம். இவர் அறிவாளி; கோமாளி அல்லர்; பிறரை வருத்தும் சொற்களை அறிவுடையார் என்றும் கூறார், காய்தல் அகற்றுக உவத்தல் கொள்க : வாழ்க்கை சாய்வது இல்லை.