பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

காரணம் என்ன ? சரியான பதில் தருவோருக்குப் பரிசு பத்தாயிரம்! விளம்பரதாரர் தருவர்; அதை இளம் தம்பதிகள் பெறுவர்.

நாயகன் படம் பார்த்தாயா ! நீ எங்கே பார்க்கப் போகிறாய் ! உனக்குப் படம் பார்க்கவே பிடிக்காதே. அதில் ஒரு முக்கியமான காட்சி. அமைச்சர் மகன் காவல் துறை அதிகாரியின் மகளை வம்புக்கு இழுத்து அவளைக் கெடுக்க முயல்கிறான்; நீதித்துறை செயல் இழந்துவிட்டது. அதன் மீது நம்பிக்கை இல்லை காவல் துறை அதிகாரிக்கு; அவர் துறையிலேயே அவருக்கு நம்பிக்கை இல்லை; முரடர் தலைவனிடம் வந்து முறையிடுகிறார்.

"நீர் காவல் துறை அதிகாரி, நீரே தண்டித்து இருக்கலாமே" என்று கேட்கிறான் முரடர் தலைவன்.

"அமைச்சர் மகனை எதிர்த்து நான் ஒன்றும் செய்ய முடியாது" என்று தன் இயலாமையைக் கூறுகிறார். ஏன் அந்தக் காவல் அதிகாரி கோழையாகி விட்டார்? நீதி ஏன் தோற்று விட்டது ? சரியான பதில் எழுதி அனுப்புங்கள். விடை புதிதாக இருக்கவேண்டும். நீரே சிந்தித்து முடிவு செய்க. "சாதிப் பசு; அதற்கு மதிப்பு அதிகம். நீதி தோற்று விடுகிறது" என்ற பதில் வருகிறது.

"பழகிவிட்ட பிறகு அ வ ர் க ள் பழமையைப் பாராட்டுக" என்கிறார் வள்ளுவர்.

"பிறர் தீமை செய்தாலும் மன்னித்து விடு ; வெட்கப் படும்படி நன்மை செய்க" என்றும் கூறுகிறார்.

4