பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

பெயரே அது பொய் பேசாது என்பதைக் காட்டுகிறது. வாய்மை 'பொய்' பேசாது இது சொல் விளக்கம்; அதற்குப் 'பொய்' என்று யாரும் பெயரிடவில்லை. மனம், வாக்கு செயல் இம்மூன்றிலும் மாசு மறுவற்றவராய்த் திகழ்வர்; நிலைமாறினாலும் தம் உளம் மாறாத உத்தமர்கள் அவர்கள். சம நிலையில் வாழ்ந்து எதையும் தாங்கும் மன இயல்போடு வாழ்பவர் அவர்கள்; இவை எல்லாம் மேன்மக்களின் நற்குணங்கள்; செயல்கள் ஆகும்.

இதுதான் அறநெறி என்று எடுத்துரைக்கத் தேவை இல்லை; இந்த மூன்று நன்னெறிகளை ஒருவன் பின்பற்றினால் அதுபோதும் அவனை உயர்த்துவதற்கு; இவனை மற்றவர்கள் செவிடன் என்று பெசும் அளவிற்கு மற்றவர்களின் வாழ்க்கையை விமரிசிக்கக் கேட்க வேண்டாம்,

பக்கத்து வீட்டுக்காரன் தன் மனைவியைத் தினம் அடித்துத் துன்புறுத்துகிறான். 'அடிதடி' காதில் போட்டுக் கொள்ளாதே. அவனைச் சந்திக்கும்போது கேட்டு விடாதே. கேட்டால் அவன் என்ன கூறுவான்? "உன் மனைவியை நீ அடித்துக்கொள் நான் கேட்கவில்லை" என்பான். "அவள் என் உடமை; அவளை அடிப்பது எனக்கு அதில் ஒரு மகிழ்ச்சி, உன்னை அடித்தால் வந்துகேள்" என்பான்; கல்லை அறைவானேன் கைநோவு என்று கூறுவானேன். மற்றவன் மனையில் அவளை உற்றுப் பார்ப்பதைத் தவிர்க. இந்த வகையில் நீ குருடனாய்ச் செயல்படுக; அவளைப் பார்த்தால் என்ன பயன்? அவள் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிடுவாள். "எதிர்வீட்டுக்காரர் நான் சேலை அழகாகக் கட்டிச் சென்றால் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; உறுத்து உறுத்துப் பார்க்கிறார்". என்று தன் கணவனிடம் முறையிடுவாள். அவன் உடனே