பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

அவர்கள் முந்திக்கொள்வார்கள். அது எப்படிச் செய்வது? அதனால் உண்டாகும் நன்மைகள் யாவை? இவை எல்லாம் ரகசியமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தபின் அறியட்டுமே! அதுவரை அடங்கி இருப்பது தக்கது ஆகும். மற்றும் பிறர் என்ன செய்கிறார்கள்? அவர்கள் தமக்கு எப்படிப் போட்டியாக வரக்கூடும் என்பது எல்லாம் கூர்ந்து கவனித்து வரவேண்டும், அவர்கள் செய்வது எப்படி என்பதை அறிந்து தம் தொழிலுக்கு அவ் அறிவினைப் பயன்படுத்த வேண்டும். பிறர் தொடர்பைத் தக்க வழியில் பயன்படுத்துவது அறிவுடைமையாகும். எனவே தம்மை வெளிப்படுத்திக்கொள்ளாமல் மற்றவர்களைக் கவனித்துக் கொண்டும் செயலாற்றுவது வெற்றி தரும்.

சிதல் அரிக்கப்பட்ட ஆலமரம் அஃது அழிந்து விடாமல் காப்பது அவைவிடும் விழுதுகள்; அவை அம் மரத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன. மக்களும் தந்தை தொடங்கி விட்ட தொழிலைத் தொடர்ந்து காப்பது அவர்தம் கடமையாகும்.

மதங்கொண்ட யானையை அதன் கதம் அடக்கும் வலிமை உடைய வள்ளுகிர் உடைய சிங்கம் போன்ற ஆற்றல் உடையவர்கள் வீழ்நிலை உற்றபோதும் தாழ்வுறும் செயல்களில் முயலார்; சிறு தொழில் செய்து ஜீவிக்கலாம் என்று மனம் சோர்வு பெறமாட்டார்.

கரும்பின் பூக்கள் குதிரையின் பிடரிபோல் காண்பதற்குக் கவர்ச்சியாக இருக்கும். மணம் என்பது அதன் குணம் அன்று; நறுமணம் தராது. அதேபோலக் குடிப் பிறப்பு மட்டும் ஒருவனை உயர்த்திவிடும் என்று கூற முடியாது. படிப்பும், பண் பும், விடாத உழைப்பும், செயலும் மட்டுமே அவனை உயர்த்திக் காட்டும்.