பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


சோற்றுப் பிண்டங்களாய்த் தண்டசோறு தின்று கொண்டு தரித்திரராய் வீட்டில் எடுபிடிகளாகச் செயல் பட்டு ஏற்றமின்றி வாழ்வார் அவர்கள் சோம்பேறிகள்; கூழைக் குடித்தாலும் தன்மானத்தோடு தாழ்ந்து விடாத உழைப்பால் உயர்வு பெற்று ஒளிபெற்றுத் திகழ்வார்; அவர்கள் உழைப்பாளிகள். உழைப்பே உயர்வு தரும்; அண்டிப்பிழைப்பது அடிமைத்தனம் ஆகும்.

21. செல்வர்க்கு அழகு செழுங்கிளை
தாங்குதல்

(சுற்றம் தழாஅல்)

சுமை தாங்கி என்ற நிலையில் மகனை வயிற்றில் தாங்கி அவள் பெற்ற நோய்கள், மசக்கைகள் இவை எல்லாம் மகனைப் பெறும் நாள் மறக்கிறாள். அவை இன்ப நினைவுகளாய் நிற்கின்றன, பட்ட சுமை எல்லாம் ஒரு கணத்தில் மறக்கிறாள் மகனைப்பெற்ற மகிழ்ச்சியில். அதேபோலத் தாளாற்றிப் பொருள் தேடுகிறான்; பின்பு காலாற்றிச் சுற்றத்தோடு சூழ இருந்து உண்கிறான். அவர்களோடு பகிர்ந்து உண்டு, அளவளாவுகின்றான். அவர்கள் பசியைப் போக்கிய பெருமிதம் அவனை ஆட் கொள்கிறது. காதலியின் கடைக் கண் பார்வையில் விண்ணையும் சாடுவர் இளைஞர்கள்; இளைஞர்கள் பிறர் வருத்தம் தீர்கிறது என்றால் விண்ணையும் வளைத்து மண்ணையும் அளந்து அல்லும் பகலும் பாடுபட யாரும் முனைவர், சுற்றத்தினரைத் தழுவிக் கொண்டு அவர்கள் துயர் தீர்ப்பதே செல்வம் பெற்றதனால் ஏற்படும் பயன் என உணர்வர். நல்ல ஆண் மகனுக்குக் கடமைகள் சில உள்ளன. ஆளுமை உடையவன் என்று நாளும் அவனைப்