பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 நட்பியல் நட்பு கொள்வதில், கடைப்பட்டவர், பாக்கு மரம்போல் மிக்க உதவியும் உழைப்பும் தேவைப்படுவர். இடைப் பட்டவர் தென்னைபோல் ஒரளவு உதவியும் உழைப்பும் எதிர்பார்ப்பர். முதன்மையான பண்பாளர் பழைய நண்பருடன் கொள்ளும் தொடர்பு, (நட்டதைத் தவிர வேறு உதவி வேண்டாத) எண்ணுதற்கரிய சிறப்புடைய பனை மரம் போன்று, நட்பு கொண்டபோது இருந்த நிலையிலேயே என்றும் இருந்து சிறக்கும். 216 கழுநீரில் கழுவி ஆக்கிய கரிய கீரை உணவாயினும், ஒருவன் சிறந்த அன்புடன் கிடைக்கப்பெற்று உண்டால் அஃது அமிழ்தமாம். உயர்ந்த தாளிதம் உடைய துவையல் முதலியவற்றேடு கூடிய வெண்மையான சோருயிருப் பினும், பொருந்தாதாரின் கையிலிருந்து உண்ணுதல் கசக்கும் எட்டிக்காயாம். ۹ - .217 . ق நாயின் காலில் மிக அண்மையிலிள்ள சிறிய விரல்கள் போல மிகவும் அருகிலிருந்து பழகுப்வர் ஆலுைம், ஈயின் கால் அளவுகூடச் சிறு உதவியும் செய்யாதவரது நட்பில்ை பயன் என்ன? (தொலைவிலிருந்து நீரைக் கொண்டு வந்து) நிலத்தை விளைவிக்கும் வாய்க்கால் போன்றவரின் நட்பைத் தொலைவில் தேடிச் சென்ருயினும் பெற வேண்டும். 218 தெளிவில்லாதாரின் நட்பினும் பகை நல்லது; நீங்காமல் நீடிக்கின்ற நோயைவிட இறப்ப்ே மேல்; அளிந்துநெளியும் படி ஒருவரை இகழ்வதனினும் கொல்லுதல் இனியதாம்; அடுத்து, இல்லாதவற்றைக் கூறிப் பொய்யாகப் புகழ் வதனினும் திட்டுதலே நல்லதாம். 219 பலரோடு பலநாள் கலந்து பழகிப் பார்த்துப் பொருத்த மறிந்து, ஒரு பொருளாக மதிக்கத்தக்கவரது நட்பையே கொள்ளவேண்டும்; ஏனெனில், கடித்து உயிர்போக்கும் பாம்போடாயினும் கூடிப் பிறகு பிரிவதென்பது 3ಣಿ 0