பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பாக்களையுடைய திருக்குறளுடன், நாலடிப் பாடல் களேயுடைய காலடியார் இணைத்தே அறிஞர் பலராலும் பாராட்டப் பெற்றுள்ளது. சில பாராட்டுக்கள் வருமாறு: "பாலும் நெய்யும் உடலுக்கு உறுதி வேலும் வாளும் அடலுக்கு உறுதி ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி". "பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்." "நாலடி இரண்டடி கற்றவ னிடத்து வாயடி கையடி அடிக்காதே. 'நால்’ எனப்படுவது நாலடியார். இரண்டு’ எனப்படுவது திருக்குறள். மேலே காட்டப்பட் டுள்ள பகுதிகளில், திறக்குறளுக்கும் முதலிடத்தை நாலடியார் பிடித்துக் கொண்டுள்ளதே-அம்மாடி! உரைகள்: - திருக்குறளுக்குப் பழைய உரைகள் பலவும் புதிய உரைகள் பலவும் உள்ளவாறே நாலடி யார்க்கும் உள்ளன. நாலடியார்க்கு, தருமர், பதுமனர் ஆகிய பழம்பெரும் புலவர்களின் உரைகளுடன், பெயர் தெரியாத புலவர் ஒருவரின் பழைய உரையும் கிடைத்துள்ளது. இக்காலத்தி லும் புலவர் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றின் வரிசையில் அடியேனது உரையும் இப்போது இடம் பெறுகிறது. சில இடங்களில், பிறர் உரைகளினும் எனது உரையில் மாறுதல் இருக்கும்.