பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 இன்பவியல் 27. நன்மை அளிக்காத செல்வம் அருகிலே அமைந்து (ஒடு முடிய) பல பழங்கள் பழுத் திருப்பினும், பொரி பொரியான அடிமரத்தையுடைய விளா மரத்தினை வெளவால்கள் அடையமாட்டா. அதுபோல, மிகவும் அருகில் உள்ளவரானுலும் பெருமையில்லாதவரது செல்வம், ஏழைகளால் எண்ணிப் பார்க்கும் முறைமையும் உடையதன்று. 261 அள்ளிக் கொள்ளலாம் போன்ற அழகுடைய சிறுசிறு அரும்புகளை உடைத்தாயிருப்பினும், கள்ளிப்பூ அணியும் பூ அல்லவாதலால், கள்ளிச் செடியை நோக்கி எவரும் கையையும் நீட்டார். அதுபோல, செல்வம் மிக உடையவ ரானலும் கீழ்மக்களை அறிஞர் அணுகார். 262. மிகுந்த அலேகளையுடைய கடற்கரையிலே வாழ்ந்தாலும், உவர்ப்பு இல்லாத-விரைந்த ஊற்றை உடைய கிணற்றை நெடுந்தொலைவு சென்று அடைந்தே மக்கள் நீர் எடுத்து உண்பர். அதுபோல, மிக்க செல்வமுடைய கருமிகள் அருகில் இருப்பினும், நெடுந்தொலைவு செல்வதாயினும் கொடுப்பவரிடத்திலேயே மக்களின் விருப்பம் கிரும்பு, 263 நல்லுணர்வு உடையவர் வறியவராய் வாடி யிருப்ப, நல்லுணர்ச்சி யற்ற-முள்ளிச் செடியும் கண்டங்கத்தரிச் செடியும் போன்ற கீழ்மக்கள் பட்டாடையும் உயர்ந்த மெல்லிய பருத்தியாடையும் உடுத்து வசதியாக வாழ்வர். நீர் அடர்ந்த கடல் சூழ்ந்த இவ்வுலகில் புண்ணியமோ வேறு வகையாயிருக்கிறதே! - 264 வேல் போன்ற நீண்ட கண்ணையுடையவளே ! நல்ல வர்கள்-நயமுடையவர்கள் வறியவர்களாய் இருக்க, நயமே இல்லாத-கல்லாத முடர்க்கு ஒரு செல்வம் உண்டாகியிருப் பதன் காரணம், முன்பு செய்த நல்வினைப் பயனே யல்லா மல், நினைக்குங்கால் வேருென்றும் தெரியவரவில்லை. 265